திராவிட கட்சி ஆட்சிக்கு முன் விபூதி, ருத்ராட்ச மாலையுடன் இருந்த வள்ளுவர்! விளக்கும் சான்றுகள்...!

Update: 2024-05-25 03:33 GMT

1971 ஆம் ஆண்டு வரை வைகாசி அனுஷமே திருவள்ளுவரின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு தை ஒன்றாம் தேதி தான் வள்ளுவரின் பிறந்தநாள் என்று முதலில் அறிவிக்கப்பட்ட பிறகு தை இரண்டாம் தேதி வள்ளுவரின் பிறந்த நாளாக மாற்றப்பட்டது. மேலும் மதுரை திருவள்ளுவர் கழகம் உள்ளிட்ட பல இடங்களில் வைகாசி அனுஷம் அன்றே வள்ளுவர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். 

வள்ளுவரின் திருநாளில் ஆளுநர் மரியாதை: 

அந்த வகையில் இன்று திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) எனும் புனிதமான தருணத்தில், ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி மயிலாப்பூர் அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவரை தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் மாளிகையில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


காவி உடையுடன் ருத்ராட்சம் தரித்த திருவள்ளுவர் ஓவியம்: 

ஆனால் திருவள்ளுவரின் திருநாளில் மற்றுமொரு முக்கியமான விஷயம் இன்றளவும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அதாவது கடந்த சில மாதங்களாகவே காவி உடை உடன் ருத்ராட்சம் தரித்த திருவள்ளுவர் போன்ற ஓவியம் உலா வருகிறது. இதனை எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் வள்ளுவ மரபை இந்து சனாதன மரபுக்குள் இணைத்துக் கொள்ளவே இந்த செயல் நடக்கிறது என்று குற்றம் சாடி வருகின்றனர். ஆனால் உண்மையில் 1950 களுக்கு முன்பு திருவள்ளுவரின் உருவம் எப்படி வடிவமைக்கப்பட்டது அல்லது எப்படி இருந்தது என்று அலசி ஆராயும் போது கிடைக்கப்பட்ட உண்மைகள் இதோ! 

திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்: 

1904 ஆம் ஆண்டில் இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த தமிழ் பண்டிதர் கோ. வடிவேலு செட்டியார் திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் என்ற நூலை இரு பாகங்களாக வெளியிட்டார். அந்த புத்தகத்தில் திருவள்ளுவரின் படமானது திருவள்ளுவ நாயனார் என அச்சிடப்பட்டிருந்தது. மேலும் திருவள்ளுவரின் புகைப்படமானது ஜடாமுடியுடன், தாடி மீசையுடனும், இடது கையில் ஜெப மாலையும், வலது கையில் ஒரு ஓலைச்சுவடியும் இருந்தது போன்று வடிவமைக்கப்பட்டது. மேலும் நெற்றியில் பட்டையும், நடுவில் குங்குமத்தோடும் திருவள்ளுவர் காட்சியளிக்கப்பட்டார். 


விபூதி பட்டையும் ருத்ராட்ச மாலையும்: 

இதனைத் தொடர்ந்து கோ.வடிவேலு செட்டியாரின் இந்த நூலின் ஆங்கில பதிப்பு வெளியாகும் பொழுதும் அதிலும் ஒரு திருவள்ளுவர் படம் இடம் பெற்றிருந்தது. அதில், திருவள்ளுவர் கரங்களிலும் நெற்றியிலும் விபூதி பட்டையுடனும், ஒரு மரத்தடியில் அமர்ந்து இரு அடியார்கள் அவரை தொழுவது போன்றும் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடனும் வள்ளுவர் இடம் பெற்றிருந்தார். இந்தப் புகைப்படத்தை தமிழகத்தின் பல வீடுகளில் காண முடிந்தது. மேலும் திருவள்ளுவர் படங்கள் பலரும் வெளியிட்டனர். 


1950 க்கு பிறகு: 


1950 க்கு பிறகு நாம் தற்போது காணுகின்ற வெள்ளாடை அணிந்து காணப்படும் வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியை கவிஞர் பாரதிதாசன் மற்றும் திராவிட கழகத்தைச் சேர்ந்த ராமசெல்வன் என்பவர் உடன் சேர்ந்து ஓவியர் வேணுகோபால் ஆகிய மூன்று பேரும் தான் மேற்கொண்டனர். அதற்கான மொத்த செலவையும் திராவிட கழகத்தைச் சேர்ந்த ராமசெல்வன் என்பவர் தான் ஏற்றுக்கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆகவே திராவிட கழகத்தின் ஆட்சிக்கு முன்பு வரை இருந்த வள்ளுவரின் புகைப்படத்தை மாற்றி தற்போது இருக்கும் வெள்ளை உடை அணிந்த வள்ளுவரின் புகைப்படம் திணிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News