கருக்கா வினோத்- நதியாவுக்கு என்ன தொடர்பு.. திடுக்கிடும் தகவல்.. பாலியல் தொழில் பின்னணி..

Update: 2024-05-25 13:47 GMT

சரித்திர குற்றவாளி கருக்கா வினோத்:

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது 2023 அக்டோபர் 25 ஆம் தேதி ஒருவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசினார். அவரை போலீசார் மடக்கி பிடித்த போது தான், அவர் சரித்திர குற்றவாளி கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் மறுப்பதால், பெட்ரோல் குண்டை வீசியதாக வினோத் போலீஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இருந்தார். இந்தியக் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வரும் சமயத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அதே சமயத்தில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டக் கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே டாஸ்மாக், போலீஸ் நிலையம் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஏற்கனவே  காவல் நிலையத்தில் வழக்குகள் பல்வேறு நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில் தான் சிறையிலிருந்து வெளியில் வந்த வினோத் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளானது. இதை தொடர்ந்து, கருக்கா வினோத் யார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு NIA தானாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தி வந்தது. கருக்கா வினோத்தை காவலில் எடுத்தும் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 


சமூக விரோத கும்பல்களை ஆதரித்து, வளர்த்து விடுகிறதா தி.மு.க:

பலமுறை சிறை சென்ற கருக்கா வினோத்தை சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்தது யார்? அவருக்கு தேவையான நிதியுதவிகளை வழங்குவது யார்? போன்ற விவரங்களை NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரைச் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்று கூறப்படுகிறது. எனவே திமுக மறைமுகமாக சமூக விரோத கும்பல்களை ஆதரித்து வளர்த்து விடுவதாக நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள்.   


NIA விசாரணை வளையத்திற்குள் வந்த நதியா பின்னணி:

கருக்கா வினோத் என்ற நபரை தன்னுடைய பாதுகாப்பிற்காக அடியாளமாக நதியா பயன்படுத்தி வந்ததும் தற்போது விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. கருக்கா வினோத் முன்பு சிறையில் இருந்த போது, அவரை பல லட்சம் செலவு செய்து நதியா ஜாமீனில் எடுத்திருக்கிறார் நதியா. மேலும் இந்த நதியா என்று பெண் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், பல பள்ளி சிறுமிகள்,  கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாகவும் விசாரணையின் பின்னணியில் தெரியவந்தது. அதனால் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு அடியாள் தேவை என்பதை அறிந்த நதியா பல லட்சம் செலவு செய்து கருக்கா வினோத் என்பவரை தன்னுடைய தொழிலுக்கு பயன்படுத்தி வந்து இருக்கிறார். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில் தான், தமிழக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News