ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் இவ்வளவு நன்மைகளா.. பிறகு ஏன் மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு?

Update: 2024-05-26 12:05 GMT

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்பது:

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் இந்தியா முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஜுன் 2015-ஆம் ஆண்டு இந்த திட்டத்தை அறிவித்தது. மத்திய அரசு முன்னெடுத்துள்ள இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், நகரில் முக்கிய உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு நிதியையும் ஒதுக்கி தரும்.


மத்திய அரசின் நிதியுதவி:

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதியுடன் இணைந்து 12 ஸ்மார்ட் சிட்டிகள் (smart city) ஒதுக்கியுள்ளது. இதன் திட்ட காலம் 5 ஆண்டுகள் (2015-16 லிருந்து 2020வரை) ஆகும். மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்துக்கு முதலாவது சுற்றில் (2015-16) பெருநகர சென்னை மற்றும் கோயம்புத்துர் மாநகராட்சிகளும், 2வது சுற்றில் (2016-17) மதுரை, சேலம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் மாநகராட்சிகளும், 3ம் சுற்றில் (2017-18) திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், 4ம் கட்ட தேர்வுக்காக, ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகள் மத்திய அரசிடம் நவம்பர் 30, 2017ல் கருத்துருக்களை சமர்பிக்கப்பட்டு இருந்தன.


திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள்:

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஸ்மார்ட் சிட்டிகளில் (smart city), மொத்தம் ரூ.13425.65 கோடி மதிப்பீட்டில் 173 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட 173 திட்டங்களில், 3 திட்டங்கள் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன. 14 திட்டங்கள் ரூ.491.97 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 37 திட்டங்களுக்கு ரூ.1795.92 கோடி மதிப்பீட்டில் விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ளது. 119 திட்டங்களுக்கு, ரூ.11,134.12 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தரமான உள் கட்டமைப்புடன் கூடிய வகையில் வேலையை செய்ய வேண்டியது மாநில அரசு தான்:

இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சென்னை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, திருச்சி, தஞ்சை போன்ற நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட் சிட்டிக்கான திட்டங்கள் அனைத்தும் முன்னேற்ற நிலையில் உள்ளன. ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் 2023-ஆம் ஆண்டு அக்.31 க்குள் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. பல மாவட்டங்களில் இதற்கான ஒப்பந்த புள்ளிகள் குறிப்பிட்டு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை என்று மாநில தி.மு.க அரசு குற்றம் சாட்டி வருவது எந்த வகையில் நியாயம்? ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்வது தான் மத்திய அரசின் வேலை. ஆனால் அந்த நிதி ஒதுக்கீட்டை சரியான வேலைகளுக்கு பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டியது மத்திய அரசின் வேலை கிடையாது. மாநில அரசு தான் தரமான உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய வகையில் வேலைகளை செய்து பணியை முடிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கொண்டுவரும் இத்தகைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி இருப்பதாகவும், குறுகிய காலத்திற்குள் ஒப்பந்தங்களை முடிக்க வேண்டும் இதற்காக தரமற்ற முறையில் பல்வேறு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் இதில் ஊழல் நடந்து இருப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.


ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் நடத்த ஊழல்:

நெல்லையில் கடந்த ஆண்டு மே, 5 2023 அன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் 45 நிமிடம் நீடித்த மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மேலும் சூறைக்காற்றில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் கேலரியின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை பெயர்ந்து தூக்கி வீசப்பட்டு சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேலரி மேற்கூரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இதற்கு பாஜக தலைவர் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழக அரசு(திமுக) மேற்கொண்ட இந்த திட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக அன்றே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். 

Input & Image courtesy:  News

Tags:    

Similar News