சத்தம் இல்லாமல் பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்ப்பில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்! கைதும் பின்னணியும்!

Update: 2024-05-26 12:47 GMT

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கௌரவ பேராசிரியராக பணிபுரிந்த ஹமீது உசேன் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

அறக்கட்டளை மீது அடுக்கடுக்கான புகார்கள்: 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானிஜஹான்கான் தெருவில் செயல்பட்டு வரும் மார்டன் எஜுகேஷன் கல்வி அறக்கட்டளையை நடத்தி வருபவர் ஹமீது உசேன். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கௌரவ பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் ஹமீது உசேன் நடத்தி வந்த அறக்கட்டளை மீது இளைஞர்களுக்கு பயங்கரவாத சித்தாந்தங்களை போதித்ததாகவும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்த்து விட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதைத் தவிர மதப் பிரசங்கங்கள் என்று கூறி ரகசிய கூட்டங்களையும் ஹமீது உசேன் அடிக்கடி நடத்தி வந்ததாகவும் அடுக்கடுக்கான புகார்கள் ஹமீது உசேன் மீது எழுந்தது. 

அதிரடி சோதனை: 

இதனால் இந்த புகாரை அடிப்படையாக வைத்து ஹமீது உசைன் மற்றும் மாடர்ன் எஜுகேஷன் கல்வி அறக்கட்டளை மீதும் கண்காணிப்பானது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை ராயப்பேட்டை, தாம்பரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையையும் மேற்கொண்டு பல டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதோடு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அறக்கட்டளையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதோடு ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் பொழுது இந்த மூன்று பேரும் ஹெச் யு டி என்ற சர்வதேச அமைப்புடன் தொடர்பில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. 

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்ப்பு: 

அதுமட்டுமின்றி ஹிஸ்புத் உத் தஹ்ரிர் (ஹெச் யு டி) என்று சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களாகவும் ஹமீது உசேன், அகமது மன்சூர் மற்றும் அப்துல் ரகுமான் ஆகிய மூன்று பேரும் இருந்துள்ளனர். இதனால் தங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆட்களையும் திரட்டி வந்ததும் விசாரணையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் தனியாக ஒரு யூடுயூப் சேனலை நடத்தி வந்த ஹமீது உசேன் அதில் இந்திய தேர்தலுக்கு எதிராகவும் கிலாபாத் என்ற சித்தாந்தத்தை குறித்தும் பேசி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. 

உபா (UAPA) சட்டம்: 

இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்த மூன்று பேரை போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனை அடுத்து ஹமீது உசேன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த முகமது, நவாஸ் ஷெரிப் மற்றும் அகமது அலி ஆகிய மூன்று பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் தற்பொழுது இந்த மூன்று பேரிடமும் விசாரணைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஹமீது உசைன் அண்ணா பல்கலைக்கழகத்திலும் கௌரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளதால், அவர் பணியாற்றிய போது இளைஞர்கள் இதுபோன்று மூளைச்சலவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்களா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.

Tags:    

Similar News