தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க என்ன செய்தது? தமிழக ரயில்வேக்கு மட்டும் இவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளதா?
மோடி அரசு கொடுக்கும் முக்கியத்துவம்:
ரயில்வே துறை பால் சுரக்கும் பசுவாகவே முந்தைய ஆட்சிகளில் பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், ரயில்வே துறையில் ஒட்டுமொத்தமாக சீர்திருத்த மேம்பாடுகள் செய்து, அதன் வாயிலாக நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டது. கடந்த, 10 ஆண்டுகளில், ரயில்வேயில் பல புதிய திட்டங்களுடன், முந்தைய திட்டங்களை வேகப்படுத்துவது, விரிவு படுத்துவது, நவீனமயமாக்குவது போன்றவை மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாளொன்றுக்கு, 4 கி.மீ. துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும், 5,300 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த, 10 ஆண்டுகளில், 31,000 கி.மீ., துாரத்துக்கு ரயில் பாதை அமைக்கப் பட்டது. இது ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்த ரயில் பாதையைவிட அதிகமாகும் என்பது உங்களுக்கு தெரியமா?
கடந்த, 10 ஆண்டுகளில், 44,000 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கப் பட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், 20,000 கி.மீ., துாரத்துக்கே மின்மயமாக்கப்பட்டது. விரைவில் மின்மயமாக்குவதில், 100 சதவீதத்தை எட்ட உள்ளது மோடி அரசு. ரயில் நிலையங்களை புதுப்பிப்பது, உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகள் தயாரிப்பது ஆகியவற்றுக்கு மோடி அரசு முக்கியத்துவம் தருகிறது. தற்போது, 300 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 'வந்தே பாரத், புல்லட் ரயில்' என, அதிகவேக ரயில் சேவைகள் சாத்தியமாகியுள்ளன.
ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு:
இந்திய ரயில்வேயை தற்சார்பு இந்தியாவின் புதிய ஊடகமாக மாற்றி வருகிறது மோடி அரசு. நமது விஸ்வகர்மா நண்பர்கள், கைவினைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உள்ளூர் தயாரிப்புகள் இப்போது ரயில் நிலையங்களில் விற்கப்படும். இதுவரை, ரயில் நிலையங்களில் "ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு" என்ற 1500 அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை சகோதர சகோதரிகள் பா.ஜ.க ஆட்சியின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.