திமுகவின் பேச்சும் செயலும்! திருக்குறளை வைத்து அரசியல் செய்யும் திராவிட கட்சிகள்..!

Update: 2024-05-30 09:46 GMT

பிரதமரும் திருக்குறளும்:

உலகப் பொதுமறையான திருக்குறள் அனைவருக்கும் வேண்டிய அனைத்து கருத்துகளையும் ஒருங்கே கொண்ட நூல். இந்த நூலின் மகத்துவம் மற்றும் பெருமை தமிழக முழுவதும் பரவி கிடைக்கிறது. ஆனால் இதனை உலகம் முழுவதும் பரப்பும் நடவடிக்கைகளையும், அதற்காக உலக மேடைகள் ஒவ்வொன்றிலும் திருக்குறள் குறித்து மேற்கோள் காட்டி பேசும் ஒரு தலைவராகவும், வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அப்படி பிரதமர் திருக்குறளைக் குறித்து பேசிய மிக முக்கியமான மேடைகளில் ஒன்றானது ஜி 20. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமையிலான ஜி-20 மாநாட்டின் நான்காவது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.


அதில் பிரதமர் காணொளி வாயிலாக பேசும் பொழுது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் திருக்குறளில், 

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி 

தான்நல்கா தாகி விடின்  

என்ற குரலை மேற்கோள்காட்டி, தண்ணீரை இழுத்துச் சென்ற மேகம் மழையாக திரும்பக் கொடுக்காவிட்டால் கடல் கூட சுருங்கிவிடும் என்று இக்குறளின் விளக்கத்தையும் இயற்கையின் மகத்துவத்தையும் தமிழில் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார். இதை தவிர, உலகம் முழுவதும் திருக்குறள் கிடைக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு பாஜக 2024 லோக்சபா தேர்தல் அறிக்கையிலும், உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி உலகப் பொதுமறை என்று திருக்குறள் பெயரளவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொதுமறையாக போற்றப்பட வேண்டும் என பாஜக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

திமுகவும் திருக்குறளும்: 

ஆனால், திருக்குறள் குறித்து பிரதமர் முன்வைக்கும் கருத்துக்களுக்கும், உலகளவில் திருக்குறளை எடுத்துச் செல்வதற்கு பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், தொடர் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திருக்குறளில் கூறியது படி தான் நடந்துள்ளார்களா என்பதை பார்க்கலாம், 

புலால் மறுத்தல்: 

திருக்குறளில் அறத்துப்பால் துறவியலில் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பத்து திருக்குறளின் விளக்கமானது, தன் உடம்பை பெருக்குச் செய்வதற்காக ஒருவர் மற்றொரு உயிரின் உடம்பை தின்றவன் அருளுடையவனாக இருக்க முடியாது என்றும், ஒரு உயிரின் உடம்பை சுவையாக உள்ளவரின் மனம் கொலை கருவியை கையில் கொண்டவரின் நெஞ்சம் போல நன்மையாகி அருளை போற்றாது என்றும், புலால் தின்பதால் ஒருவர் எத்தனை பாவங்களை மேற்கொள்கிறார் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இதற்கான விளக்கத்தை திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி அவர்களே கூறியுள்ளார். ஆனால் அவற்றை மறந்து விட்டு மாட்டிறைச்சி உண்பதற்கு தடை விதித்ததற்கு தொடர்ச்சியாக மாட்டிறைச்சி திருவிழாக்களையும், விழாக்களையும், போராட்டங்களையும் மேற்கொண்டது இந்த திராவிட முன்னேற்றக் கழகம் அரசு. அதுமட்டுமின்றி தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் மாட்டுக்கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா என விருந்தளித்து கொண்டாடினார்கள். 


ஆம்பூர் பிரியாணி திருவிழா:

இது மட்டுமின்றி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆம்பூரில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணி வழங்கவில்லை என்றால் நாங்கள் இலவசமாக பீப் பிரியாணி வழங்குவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ மற்றும் மனிதநேய கட்சி உள்ளிட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகள் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி திமுக திருக்குறளைப் பற்றி பேசுவது ஒன்றாக இருந்தால் அவர்களின் செயல்பாடுகள் அதற்கு மாறாக உள்ளது. 

மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், திருவள்ளுவரை போற்ற வேண்டும்,திருக்குறள் படி தமிழர்கள் வாழ வேண்டும் என திருக்குறள் குறித்தும்,திருவள்ளுவர் குறித்தும் வாய் கிழிய கிழிய பேசும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், திக, கம்யூனிஸ்ட்கள் எல்லாம் தான் மாட்டுக்கறி விருந்தும், மாட்டுக்கறி திருவிழாவும், விழாவும் நடத்துகின்றனர். திருக்குறளையும், திருவள்ளுவரையும் அரசியலுக்காகவே திமுக பயன்படுத்துகிறதே தவிர திருக்குறளையும், திருவள்ளுவரையும் திமுக பின்பற்றுவதில்லை! 

Tags:    

Similar News