தமிழகத்தில் எகிறி வரும் விலைவாசி.. கட்டுப்படுத்த தவறிய தி.மு.க.. ஏழை மக்கள் அல்லல்படும் சூழல்..

Update: 2024-06-02 10:18 GMT

குடும்பத் தலைவிகள் சோகம்:

தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருமே சோகத்தில் ஆழ்த்தும் விதமாக தற்போது காய்கறி விலை பல மடங்கு உயர்த்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக சில காய்கறிகளை நாம் பார்த்து பார்த்து பயன்படுத்தக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் வேதனை பட்டு இருக்கிறார்கள். காய்கறியும் தங்கம் விலை போல் உயர்ந்து இருப்பதை எண்ணி கலக்கம் அடைந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஆளும் திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுத்த பாடு கிடையாது.  இதன் காரணமாக தமிழகத்தில் நடுத்தார மக்கள்,ஏழை எளியோர் அல்லல்படும் சூழல் ஏற்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  


தமிழகத்தை பொறுத்தவரை ஆண்டு முழுவதும், 6.90 லட்சம் ஏக்கரில் காய்கறி சாகுபடி நடந்தாலும், மாநிலத்தின் ஒட்டு மொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லை. இங்கு இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாகுபடி அதிகமாக செய்யப்படவில்லை. ஆளும் திமுக அரசும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நாம் அண்டை மாநிலங்களை சார்ந்து இருக்க வேண்டிய ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நாம் அதிகமாக காய்கறிகளை வாங்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.


காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு அதிகமாக மத்திய அரசு நிதி உதவிகளை வழங்கி வந்தாலும், பல்வேறு திட்டங்கள் வாயிலாக முயற்சிகள் எடுக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் உற்பத்தி அதிகரித்ததா? என்று கேட்டால் கிடையாது என்பது தான் முடிவாக இருக்கிறது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, 3 ஆண்டுகளாக பல்வேறு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனாலும், காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கவில்லை.


காய்கறி உற்பத்தி முடக்கம்:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி உற்பத்தி முடக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறைந்தபட்சமாக காய்கறிகளின் விலை ஆனது 80 ரூபாயிலிருந்து துவங்குகிறது. தமிழகத்தில் விலைவாசி அனைத்தும் அதிகபட்சமாக உயர்ந்து இருக்கிறது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கூட கஷ்டப்பட்டு தான் நடத்தி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்க வேண்டிய காய்கறிகளை வெறும் கிராம் கணக்கில் தான் வாங்கி வருகிறார்கள். ஆட்சி செய்பவர்கள் சரியாக நடத்தினால் நாங்கள் ஏன் இப்படி புலம்பு போகிறோம்? என்று குடும்ப தலைவிகள் ஆங்காங்கே கேள்வி எழுப்புவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News