மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு.. லோக்சபா தேர்தலால் நடந்த மாற்றமா?.

Update: 2024-06-06 11:40 GMT

இந்தியா முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மகாராஷ்டிராவில் 19, 26 ஏப்ரல், 7, 13 மற்றும் 20 மே ஆகிய தேதிகளில் முதல் 5 கட்டங்களில் தேர்தல் நடந்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகின.


அங்கு 3 விதமான கூட்டணிகள் உள்ளன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடைந்த காரணத்தால் தேர்தல் கூட்டணிகள் மூன்றாக பிரிந்தன. பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஜா ஆகியவை ஒன்றாக கூட்டணி வைத்தன. இதற்கு மகாயுத்தி என்று பெயர் வைக்கப்பட்டது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. இதற்கு மகாஆகாடி என்று வைக்கப்பட்டு உள்ளன. இது போக சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளன.


மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா இரண்டையும் பாஜக உடைத்தது. இதனால் இரண்டு அணிகள் உருவாகின. சின்னங்களும் மாறின. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் எந்த அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்?. யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்? எந்த அணியை உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி இருந்தது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தவ் தாக்கரே கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவில் இருக்கும் எம்.பிக்கள் சிலரிடம் சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


அது மட்டும் கிடையாது திடீரென பா.ஜ.கவைச் சேர்ந்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, "என் முழு நேரத்தையும் பாஜகவை அமைப்பு ரீதியிலாக வலுப்படுத்தவே செலவிட விரும்புகிறேன். ஆகவே, மாநில அரசின் பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ.க மத்திய தலைமையிடம் கோரிக்கை வைக்க உள்ளேன்" என்று பத்திரிகையாளர்களுக்கு அவர் செய்தி அளித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News