ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில் காணாமல் போன தமிழக கோவில் சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன..

Update: 2024-06-11 12:47 GMT

திருடு போன திருமங்கை ஆழ்வார் சிலை:

1957 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்த திருமங்கை ஆழ்வார் சிலை திருடு போனது. இந்த சிலை 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கூறப்படுகிறது. இதனை அடுத்து, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அன்று சிலை திருடு போனது குறித்து சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டியில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மர்ம நபர்கள் சிலையை திருடி விட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக போலி சிலையை அங்கு வைத்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கோவிலில் திருடு போன உண்மையான சிலையின் படம் புதுச்சேரியில் உள்ள இந்தோ பிரெஞ்ச் இன்ஸ்டிடியுட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, போலி சிலையுடன் ஒப்பிடப்பட்டு அதற்குப் பிறகே போலீசார் இந்த முடிவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. 

இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு:

அதுமட்டுமின்றி திருடு போன உண்மையான சிலை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை 1967ஆம் ஆண்டு சூத்பி ஏல மையத்தின் மூலம் ஜே.ஆர்.பெல்மாண்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடமிருந்து ஏலம் எடுக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்திய பிரைடு திட்டத்தின் கீழ், தொல்பொருள் நிபுணர் விஜயகுமார், தமிழகத்திலிருந்து திருடப்பட்ட ஆழ்வார் சிலை அருங்காட்சியகத்தில் உள்ளது தான் என்பதை உறுதி செய்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடத்தும் தெரிவித்து, சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு முறைப்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் திருமங்கை ஆழ்வார் சிலையை ஒப்படைக்க அருங்காட்சியகமும் முடிவு செய்துள்ளது. சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான 90% ஏற்பாடுகள் முடிந்து விட்டதாகவும், விரைவில் இந்தியாவிற்கு இச்சிலை கொண்டுவரப்படும் என்றும் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

இன்னும் மீட்க காத்திருக்கும் சிலைகள்:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் கோவிலில் திருடப்பட்ட சிலை தற்போது மீட்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான காளிங்க நர்த்தன கிருஷ்ணனின் சிலையானது அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கலை அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும், விஷ்ணு கோவில் டெக்சாஸில் உள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும், ஸ்ரீதேவி சிலை குளோரிடாவில் உள்ள ஒரு ஏலத் தொகுப்பு மையத்தில் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Source : Dinamalar 

Tags:    

Similar News