இந்திய பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்படுகிறதா? பா.ஜ.க கேள்வி..
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்:
எழுத்தாளா் அருந்ததி ராய் மீது உபா எனப்படும் சட்ட நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது. இந்த ஒரு விவகாரத்தில் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே வலுவான விவாதம் எழுந்து இருக்கிறது. ஜம்மு-காஷ்மீா் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்க தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்திருப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லியில் 2010 ஆம் ஆண்டு, ‘ஆசாதி-தி ஒன்லி வே’ என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருந்ததி ராய், காஷ்மீா் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஷேக் செளகத் ஹுசைன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
காஷ்மீா் பிரிவினையை மையமாகக் கொண்டு இந்தக் கூட்டத்தில் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக காஷ்மீரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சுஷீல் பண்டிட், தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை ரத்து செய்தது. இதையடுத்து, இக்கூட்டம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அருந்ததி ராய், ஷேக் செளகத் ஹுசைன் ஆகியோரை உபா சட்டத்தின்கீழ் விசாரிக்க டெல்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்தாா்.
பிரிவினைவாதிகளை ஆதரிப்பதே காங்கிரஸ் வழக்கமா?
துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு பல்வேறு கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறும் பொழுது, தேர்தல் தோல்விகளை திசை திருப்பும் வகையில் பல்வேறு நெருக்கடிகளை பாஜக கொடுத்து வருவதாகவும், கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள். பல்வேறு எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக செய்தி தொடர்பாளர் கூறும் பொழுது, "பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் அருந்ததி ராய் மீது வழக்கு பதிய கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார். இதற்கு ஏன் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கிறார்கள்? மேலும் இதுபோன்ற பிரிவினைவாதிகளை ஆதரிப்பதை காங்கிரஸ் தன்னுடைய வழக்கமாக வைத்து இருக்கிறது. இன்னும் காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் ஏன் இவ்வளவு பரிவு காட்டுகிறார்கள்? என்று தெரியவில்லை என்றும், இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் அவர்கள் உங்களை பாதுகாக்க முடியும் என்றும்" அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.
Input & Image courtesy: News