மோடி அரசின் வேளாண் தோழிகள் திட்டம்.. பெண்களுக்கு இவ்வளவு பயன்களா?

Update: 2024-06-19 11:45 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று ஜூன் 18, 2024 வாரணாசியில் 30,000-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண் தோழிகள் சான்றிதழ்களை வழங்கி உள்ளார். வேளாண்மையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்து, கிராமப்புற பெண்களின் திறன்களை மேலும் மேம்படுத்த, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை 30.08.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் லட்சிய முயற்சியாகும்.

வேளாண் தோழிகள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வேளாண் தோழிகள் திட்டம் என்றால் என்ன? 'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தின் கீழ், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வேளாண் தோழிகள் திட்டம், அதன் ஒரு பரிமாணம் ஆகும். வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், கிராமப்புற பெண்களுக்கு வேளாண் தோழிகளாக அதிகாரம் அளிப்பதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேளாண் தோழிகளுக்கு துணைத் தொழிலாளர்களாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் . "லட்சாதிபதி சகோதரி" திட்ட நோக்கத்துடன் இந்தச் சான்றிதழ் வகுப்பு இணைந்துள்ளது.


வேளாண் தோழிகளுக்கு என்ன வகையான பயிற்சி வழங்கப்படுகிறது?  வேளாண் தோழிகளுக்கு ஏற்கனவே 56 நாட்களுக்கு பல்வேறு சேவைகளில் பின்வரும் தொகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 1. நிலத்தைத் தயார் செய்வது முதல் அறுவடை வரை வேளாண் சூழலியல் சார்ந்த நடைமுறைகள், 2. உழவர் களப் பள்ளிகளை அமைத்தல், 3. விதை வங்கிகள் + ஸ்தாபனம் மற்றும் மேலாண்மை, 4. மண் வளம், மண் மற்றும் ஈரப்பத பாதுகாப்பு நடைமுறைகள், 5. ஒருங்கிணைந்த பண்ணை முறைகள்,            6. கால்நடை மேலாண்மையின் அடிப்படைகள், 7. உயிரி இடுபொருட்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு, உயிரி இடுபொருட்களின் விற்பனையகங்களை நிறுவுதல், அடிப்படை தகவல்தொடர்பு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 


தற்போது, இந்த வேளாண் தோழிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்க முகமைகள் மூலம் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 70,000 வேளாண் தோழிகளில், இதுவரை, 34,000 பேர் துணைத் தொழிலாளர்களாக சான்றளிக்கப் பட்டுள்ளனர். வேளாண் தோழி பயிற்சித் திட்டம் முதல் கட்டமாக தமிழ்நாடு, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம்,மேகாலயா ஆகிய 12 மாநிலங்களில் தற்போது வேளாண் தோழிகள் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறது. முழு இந்தியாவில் செயல் படுத்துவதற்கான நடைமுறைகளை மோடி அரசாங்கம் தொடங்கி இருக்கிறது.

Input - Image courtesy:News

Tags:    

Similar News