கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்.. தி.மு.க கூட்டணி கட்சிகள் எல்லாம் ஏன் வாய்திறக்காமல் உள்ளார்கள்?
தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை அருந்திய 37 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். மேலும் 74 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் கேட்கும் மரண ஓலம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் என்ற பகுதியில் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த 74 பேர் ஆபத்தான நிலையிலும், 37 பேர் உயிர் இழந்தும் இருக்கிறார்கள். மேலும் 74-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார்கள். இதில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
யார் யார் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தினார்களோ? அவர்கள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மொத்தமாக 109 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து திமுக தரப்பில் தற்போது வரை தெளிவான தகவல்கள் மற்றும் விசாரணைகள் எதுவும் நடத்தியதாக தெரியவில்லை. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய ஆதங்கத்தையும் கண்டன பதிவுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார். பிறகு அவர் தனது அறிக்கையில், "கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என்று வெறும் அறிக்கையை மட்டும் தான் வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணம் நடந்து இருக்கிறது. அப்போதிருந்தே திமுக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் இப்போது இத்தகைய பெரும் மரண அபாயத்தை குறைத்திருக்க முடியும். ஆனால் திறனற்ற திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வெறும் பணத்தை மட்டும் கொடுத்து அவர்களை சமாளித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால், முதல் ஆளாக முன்வந்து நிக்கும் திமுக தற்போது கள்ளக்குறிச்சியில் நடக்கும் இந்த ஒரு பெரிய விஷயத்தை கண்டு கொள்ளாமல் அறிக்கையை மட்டும் வெளியிடுவது ஏன்? என்று சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.