கள்ளச்சாராய மரணம்.. நீதி கேட்டு பா.ஜ.க மாநிலம் தழுவிய போராட்டம்.. நூற்றுக்கணக்கான பா.ஜ.கவினர் கைது..

Update: 2024-06-22 14:16 GMT

தமிழ்நாடு முழுக்க இன்று கள்ளச்சாராய மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பாஜக சார்பிலான இந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் பல்வேறு பாஜக தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை கைது செய்து இருக்கிறார்கள். இதில் முக்கியமான நகரங்களில் நடத்தப்பட்ட பாஜக சார்பிலான போராட்டங்களின் தொகுப்பு.


1. கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, இன்று சேலம் மாவட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திறனற்ற தி.மு.க அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தனர்.


2. கள்ளச்சாராயத்தை ஊக்குவித்து மக்கள் உயிரை பறிக்கும் திமுகவைக் கண்டித்து திருவண்ணாமலையில் ஆர்பாட்டம் நடத்திய போது பாஜக மாநில நிர்வாகி அஸ்வத்தாமன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


3. கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து, இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, திறனற்ற தி.மு.க அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தனர்.


4. கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்து இன்று ஓசூரில் இளைஞரணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையுமே தமிழக காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து இருக்கிறார்கள்.


5. கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை தடுக்கத் தவறிய தி.மு.க அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து, இன்று திருச்சி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திறனற்ற தி.மு.க அரசின் ஏவல் துறையாக செயல்படும் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்தனர்.


இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கங்களில் கூறும் பொழுது, "கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச். ராஜா உட்பட நூற்றுக்கணக்கான தமிழக பாஜக சகோதர, சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழக பாஜக சகோதர, சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது. இந்த அடக்குமுறைக்கு தமிழக பாஜக அஞ்சப்போவதில்லை. பிற மாவட்டங்களிலும், இன்று மதியமும், மாலையும், கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்" என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News