பெருகும் நாய் கடி தொல்லை...கண்டுகொள்ளுமா திராவிட அரசு! மக்கள் கோரிக்கை..!

Update: 2024-06-25 16:39 GMT

அதிகமாகும் நாய் கடி:

சமீப காலமாக தமிழகம் முழுவதும் தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களால் மக்கள் பாதிப்படையும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் கொளத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பல் மருத்துவரான கிருத்திகா இரவு நேரத்தில் தனது சொந்த நாயுடன் நடமாடும் போது, வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான மூன்று நாய்களால் தாக்கப்பட்டார். மேலும் கிருத்திகாவின் கணவர் தங்கள் செல்லப் பிராணிகளை பாதுகாக்க முயன்ற போதும் காயமடைந்தார். மேலும் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த மே மாதத்திலேயே வீட்டில் வளர்க்கப்படுகின்ற நாயால் ஐந்து வயது சிறுமி மற்றும் பத்து மாத குழந்தை தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

பாதிக்கப்படும் சிறு குழந்தைகள்:

மேலும் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி 16 வயது சிறுவன் தன் பக்கத்து வீட்டு நாய் கடித்ததால் காலில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் மற்றும் ஜூன் 19ஆம் தேதி அன்று ஆறு வயது சிறுவன் தெரு நாய்க்கு பிஸ்கட் கொடுக்கும் பொழுது முகம் மற்றும் கைகளில் நாய் கடி பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இப்படி தொடர்ச்சியாக செல்லப்பிராணிகள் மற்றும் தெருநாய்களால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் உட்பட பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி அச்சன்புதூர் நகரில் எட்டு வயது சிறுமியை 6 தெரு நாய்கள் கூட்டமாக தாக்கியதில் தலை, கைகள் மற்றும் கால்களில் பலமான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

புறக்கணிக்கப்பட்ட புகார்கள்:

இதனை அடுத்து சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் கடையநல்லூர் எம்.எல்.ஏ சி.கிருஷ்ண முரளி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து அச்சன்புதூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் டாக்டர் சுசிகரன், கலெக்டரிடம் மனு அளித்து, அப்பகுதியில் தெருநாய் பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக இதற்கான முறையீடுகள் முன்பே அழிக்கப்பட்ட போதும் புறக்கணிக்கப்பட்டது. ஆகவே வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்புத் துறையும் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அலட்சியமான பதில்:

இருப்பினும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களால் பலர் காயமடைந்து வருகின்றனர். அதற்கு அரசு தரப்பில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பார்க்கும் பொழுது செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் நோக்கில் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும் மற்றும் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை மட்டுமே எங்களால் செய்ய முடியும், அதனால் சிறு குழந்தைகளை தெரு நாய்களுக்கு அருகிலும், தெரு நாய்களுக்கு உணவளிக்க முற்படும் பொழுதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சென்னை மேயர் பிரியா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். 

இதனை அடுத்து வரிசையாக இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகும் தமிழ்நாடு விலங்குகள் மற்றும் நகர்ப்புறங்களில் பறவைகள் சட்டம், 1997ன் கீழ், சில விலங்குகளை சொந்தமாக வைத்திருப்பதற்கு தடை விதிப்பதில் சட்டரீதியான சவால்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி பதிலளித்தது. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ஏபிசி) விதிகளை பின்பற்றுவதை ஆணையர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

வலுவெடுக்கும் கோரிக்கைகள்:

ஒரு பக்கம் வளர்ப்பு பிராணிகள் மற்றும் தெருநாய்களால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதிக அளவில் பாதிக்கப்பட்ட வருகின்றனர். ஆனால் அரசு தரப்பில் இப்படி அலட்சியமான பதில்கள் கொடுக்கப்படுகிறது. வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் குறித்த வழிகாட்டுதல்களை வளர்ப்பு பிராணிகளின் உரிமையாளர்கள் மேற்கொள்கிறார்களா என்பதையும், தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா, கருத்தடை செய்யப்படுகிறதா என்பதையும் கண்காணித்து தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுவெடுத்து வருகிறது. 

Source : The Commune 

Tags:    

Similar News