நீட் தேர்வு தான் அரசு பள்ளி மாணவர்கள் பலரை டாக்டர் ஆக்கியது : அண்ணாமலையின் பதிவுகள்
நீட்டில் சாதனை புரியும் தமிழக மாணவர்கள்:
12 படிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் ஆரம்ப காலத்தில் மக்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல தமிழக மாணவர்கள் நீட்டில் தங்களது திறமைகளை காட்டி தேர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வட மாநிலங்களில் நீட் எழுதும் மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் நடந்து முடிந்த நடப்பாண்டிற்கான நீட் நுழைவு தேர்வில் முடிவுகளில் கடந்த ஆண்டை விட அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக 67 பேர் 720/ 720 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்தனர். அவர்களின் ஏழுபேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.70 லட்சம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஆண்டு 78,693 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 10,733 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர் பிரபஞ்சன் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றதோடு, மேலும் நான்கு தமிழக மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்து தகுதி பெற்றனர்.
97% மாநில பாடத்திட்ட வினாக்கள்:
மேலும், 2020 இல் 17,101; 2021 இல் 19,868, 2022 இல் 21,965; 2023 இல் 30,536; 2024இல் 36,333 என தமிழகத்தில் நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக தமிழகத்தில் இருந்து நீட்டை விலக்குவோம் என தொடர்ந்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. முன்னதாக, நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தை தவிர சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கேள்விகள் தான் கேட்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை திமுக தரப்பு முன்வைத்து நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால், நீட் தேர்வில் கேட்கப்படுகின்ற கேள்விகளில் 97 சதவிகிதம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் அதிகமாக கேட்கப்படுகிறது என்று கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே நீட் விலக்கு என்பதை திமுக தனது அரசியல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்தி வருகிறது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
நீட் எதிர்ப்பு நாடகத்தை தொடரும் திமுக:
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீட் தேர்வு வந்த பிறகு தான் கிராமப்புறங்களில் இருந்து அதிக மாணவ மாணவிகள் டாக்டராகியுள்ளனர் என்று தனது எக்ஸ் வலைதளத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். அதாவது, நீட் விலக்கு என்று நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் அதன் ஒரு பகுதியாக, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள குளறுபடிகளை, தமிழக பாஜக பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.