ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்! திராவிடவாதத்தை எதிர்கொள்ளாதவர்களுடன் இணைந்த விஜய்!.

Update: 2024-07-04 03:11 GMT

முதற்கட்ட விழா - திமுக எதிர்ப்பு பேச்சு:

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது இரண்டு நிகழ்ச்சிகளில் இரு வேறு கட்சி சார்ந்த கருத்துக்களை தெரிவித்து தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இன்று அவர் முன்வைத்த சில கருத்துக்கள், திமுகவின் ஆதரவு கட்சிதான் தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு பேச்சு எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அதாவது கடந்த வருடத்தை போலவே நடப்பாண்டிலும் 10 மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று முதற்கட்டமாக சென்னை திருவான்மியூர் தனியார் திருமண மண்டபத்தில் விருது வழங்கும் விழாவை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் மாணவர்களிடையே விஜய் பேசும் பொழுது, "போதைப் பொருளை தடுப்பது அரசின் கடமை, அதேபோல இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் வேண்டியதும் அரசின் கடமைதான், அவற்றை அரசு செய்ய தவறிவிட்டது என்பதை கூறுவதற்காக நான் இங்கு வரவில்லை" என்று திமுக அரசை நேரடியாகவே விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதுமட்டுமின்றி மருத்துவம், பொறியியல் போன்று அரசியலும் ஒரு நல்ல துறை தான் நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார். 

இரண்டாம் கட்ட விழா - திமுக ஆதரவு பேச்சு:

இதற்கு சமூக வலைதளம் முழுவதும் நல்ல வரவேற்பு வந்தது. மேலும் நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று விஜய் பேசியது அண்ணாமலையை குறிப்பிட்டு தான் என்ற வகையில் அரசியல் வட்டாரம் முழுவதும் பேச்சுகள் எழுந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விஜய், "நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும். அதனால் ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் என்பது ஏற்புடையதல்ல, நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்றும், திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசை குறிப்பிடும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையையும் பயன்படுத்தி பேசியுள்ளார். 

இது அரசியல் வட்டாரம் முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனென்றால் விருது வழங்கும் முதல் கட்ட விழாவில் திமுகவை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை முன்வைத்த விஜய், இரண்டாம் கட்ட விழாவில் அப்படியே திமுகவிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரஜினி-கமல் அரசியலுக்கு வந்த பிறகு செய்ததையே தற்போது விஜய்யும் செய்ய ஆரம்பித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ரஜினி - கமல் அரசியல் பாதையை பின் தொடரும் விஜய்:

அதாவது ஒரு பக்தி உள்ள இந்துவாக அறியப்படுகின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1996 இல் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் திமுகவிற்கு ஆதரவாக இணைந்திருந்தார். மேலும் அதிமுகவை விமர்சித்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வந்தார். பின்பு ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகும் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். அதற்குப் பிறகு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். ஏனென்றால் 2021 திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க போராடிக் கொண்டிருந்தது. இவரை தொடர்ந்து 2018 தனது கட்சியின் பெயரை அறிவித்த கமலஹாசன். ஆரம்பத்தில் திமுகவை எதிர்க்கும் அரசியலை செய்து வந்தார். ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரு ராஜ்ய சபா பதவியையும் பெற்றார். ஆகவே சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் ஆரம்பத்தில் திமுகவிற்கு எதிர்க்கட்சியாக வந்தாலும், பிறகு திமுகவின் கருவியாகவே மாறி உள்ளார்கள் என்பது ரஜினி - கமல் இருவரின் அரசியல் பிரவேசத்தின் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. ஆகவே விஜயின் கடந்த கால செயல்கள் திமுகவை எதிர்ப்பதாக இருந்தாலும், தற்போது அவருடைய கருத்து ரஜினி - கமலின் அரசியல் போக்கைப் போன்று மாறி உள்ளதாக பார்க்கப்படுகிறது. 

Source : The Commune 

Tags:    

Similar News