நம் நாடு பாரத் என அழைக்கப்படுவதன் காரணமும், அதன் பின் உள்ள வரலாற்று பின்னணியும்
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜி 20 தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்று நடத்தியதை ஒட்டி இந்திய குடியரசு தலைவர் அளித்த இரவு விருந்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் கடிதத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற வார்த்தையை நாட்டின் பெயராக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு பாரத் என்று மட்டுமே அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. உண்மையில் பாரதம் என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்து விரிவாக காணலாம்.
நமது நிலம் ஏன் பாரதம் என்று அழைக்கப்படுகிறது?
புராண காலத்தில் துஷ்யன் மன்னனின் மகனைத் தவிர தசரதனின் ஒரு மகனும் பரதன் என்று அழைக்கப்பட்டுள்ளார். இவர் நான்கு திசைகளிலும் நிலத்தை கைப்பற்றி ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். மேலும் இவர் கைப்பற்றிய அனைத்து நிலங்களுக்கும் பாரத் என்றே பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாரத் என்பது சொற்பிறப்பியல், இலக்கியம், உருவகம், இயற்பியல் மற்றும் உண்மை கண்ணோட்டங்களில் இருந்து பல அர்த்தங்களை குறிக்கிறது. அதாவது,
பா என்பது ஒளியைக் குறிக்கும் ஒரு எழுத்து, ஒளி அறிவு மற்றும் அறிவொளியுடன் இவை இணைக்கப்படுகிறது. மேலும் இந்த ஒளியானது அறிவு அல்லது அறிவோளியின் உள்ளார்ந்த பொருளையும் விளக்க, ரா என்ற எழுத்து வசீகரமானது, இனிமையானது என்பதை குறிக்கிறது. ஆகவே பாரதம் அல்லது பாரதி என்பது அறிவை ரசிப்பவர், அறிவை விரும்புபவர், அறிவை தேடுபவர் என்பதை விளக்குகிறது.
அதன் காரணமாகவே காலங்காலமாக இந்திய நாட்டில் உள்ள மக்கள் அறிவை தேடுபவர்களாகவும், ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அதனால்தான் பல பெரிய ஆளுமைகள் மற்றும் மன்னர்கள் இந்த நிலத்தை பாரதம் என்று அழைத்துள்ளனர்.