திமுகவின் தமிழக பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தமிழக மாவட்டங்கள் : பதில் சொல்வாரா முதல்வர் ஸ்டாலின்
மத்திய பட்ஜெட்:
மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியை தேர்ந்தெடுத்தது. இதனை அடுத்து ஜூலை 23ஆம் தேதி (நேற்று) 2024 - 25 கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஐந்து திட்டங்களுக்கு 2 லட்சம் கோடி தொகுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக ரூபாய் 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கு 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் மற்றும் வேளாண்மை துறைக்கு ரூபாய் 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு, உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடனுதவி, 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம், பீகாரில் புதிய விமான நிலையம் மற்றும் சாலைகள் அமைக்கப்படும். நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும்,
பெண்களுக்கான திட்டத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, தொழில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக மாதம் ரூபாய் 5,000 மற்றும் ரூபாய் 6,000 சிஎஸ்ஆர் நிதியிலிருந்து தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும், பிரதமரின் நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, முத்ரா கடன் 10 லட்சத்திலிருந்து 20 லட்சம் ஆக உயர்வு, ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு என ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டில் விவசாயம், பெண்கள், இளைஞர்கள், சிறு தொழில் வணிகர்கள் மற்றும் தனிநபர் என ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
கேலித்தனமான விமர்சனம்:
இந்த பட்ஜெட்டில் ஒரு குறை கூட சொல்ல முடியாததால் தற்போது திமுக புதிய வகையில் விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் எங்குமே குறிப்பிடப்படவில்லை! இப்படி ஓர வஞ்சகம் பார்க்கிறது மத்திய அரசு! என்று கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமின்றி திமுகவின் ஆதரவாளர்கள் ஐடியில் இருந்து சமூக வலைதளத்தில் பட்ஜெட்டின் நிகழ்ச்சி நிரலில் தமிழகம் இடம்பெறவில்லை என்று கேலியாக பதிவுகள் இடப்பட்டது. அந்த பதிவின் படியே நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களின் பெயர்களை தேடினாலும் கிடைத்திருக்காது. ஏனென்றால் மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டானது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கானதல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கானது என்று திமுக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பாஜக தரப்பில் பதிலடிகள் கொடுக்கப்பட்டு வந்தது.