சமூகநீதி பேசும் ஸ்டாலின் ஆட்சியில் தொடரும் மாணவர்களிடையே ஜாதிய மோதல் சம்பவம்!
மாணவர்களிடையே ஊன்றியுள்ள சாதிய வேறுபாடு:
தமிழகத்தில் அதிர்ச்சி தரக்கூடிய வகையிலான செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்களின் படுகொலை தான் அதிகமாக நடக்கிறது என்றால், பள்ளி மாணவர்கள் தொடர்பான சம்பவங்களும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. வகுப்பறை மற்றும் பொதுவெளியில் மாணவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்வது, ஆசிரியரை தாக்குவது என மாணவர்களுக்கிடையையான சாதி ரீதியிலான பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.
அம்பாசமுத்திரம் மற்றும் மருதகுளம்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்கூடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்களால் ஒரு மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அதை திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவர்கள் இருதரப்பாக ஜாதி ரீதியில் பிரிந்து பெரும் மோதலில் ஈடுபட்டதும், அதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நாங்குநேரி சின்னத்துரை:
இந்த சம்பவங்களுக்கு முன்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வசித்து வந்த சின்னத்துரை வள்ளியூர் என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை இவருடன் படிக்கும் சக மாணவர்களே தொடர்ந்து சாதி ரீதியில் துன்புறுத்தி வந்த காரணத்தினால் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்து வந்துள்ளார் சின்னத்துரை, இந்த தகவலை சின்னத்துரையின் தங்கை ஆசிரியரிடம் தெரிவிக்க ஆசிரியர் அவர்களை கண்டித்ததால் கோபம் அடைந்த அந்த மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டிற்குள் புகுந்தே அவரை அறிவாளால் சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த சின்ன துறையின் தங்கை அதை தடுக்க முயன்ற பொழுதும், அவருக்கும் அறிவாளி வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சியை அளித்தது.