1715 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு லட்டு நெய்வேத்தியமாக படைக்க துவங்கப்பட்டது. இருப்பினும் 1803 ஆம் ஆண்டிலிருந்து தான் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியது. இருப்பினும் ஆரம்பத்தில் பூந்தி தான் விநியோயம் செய்யப்பட்டு வந்தது பிறகு 1940க்கு பின்விலிருந்து பூந்திக்கு பதில் லட்டை பிரசாதமாக வழங்கி வந்தனர். 2009ல் திருப்பதி லட்டு இருக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுகளை ஒரு நாளைக்கு தயார் செய்து வருகிறது மேலும் தற்பொழுது நாள் ஒன்றுக்கு எட்டு லட்சம் லட்டுகள் தயார் செய்யும் திறனையும் லட்டு தயார் செய்கின்ற பொடு என்ற இடம் கொண்டுள்ளது. மேலும், ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என திருப்பதியில் வழங்கப்படுகின்ற லட்டுகளும் மூன்று வகைகளை கொண்டுள்ளது.
திருப்பதி லட்டில் சேர்க்கப்படும் பொருள்கள்:
கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர் திராட்சை போன்ற மூலப் பொருட்கள் திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு கடலை மாவு சுமார் பத்து டன், சர்க்கரை 10 டன், 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ கற்கண்டு மற்றும் 540 கிலோ உலர் திராட்சை போன்ற விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தான் திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்கப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் இந்த பொருட்கள் அனைத்துமே டென்டர்களின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்பொழுது லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் தான் மாட்டுக் கொழுப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நெய் தயாரிக்கும் முறை:
ஒரு தரமான ஆரோக்கியமான நெய்யை வீட்டிலே தயாரிப்பதற்கு முதலில் தொடர்ச்சியாக பாலில் வருகின்ற பாலாடையை எடுத்து வைத்துக்கொண்டு வரவேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் அல்லது 15 நாட்களில் பாலாடையை சேர்த்து வைத்த பிறகு அதில் தண்ணீரை ஊற்றி தயிர் மத்தை வைத்து கடையலாம் அல்லது மிக்ஸி ஜாரில் பாலாடைகளை சேர்த்து அதில் குளிர்ந்த நீரை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு நமக்கு கிடைப்பது வெண்ணெய், இதற்குப் பிறகு வெண்ணையை குளிந்த நீரில் போட்டு வைக்க வேண்டும், இப்படி வெண்ணைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்த பிறகு நன்றாக காய்ச்சி வெண்ணை அனைத்தும் உருகியவுடன் அதில் முருங்கை இலையை போட்டு விட வேண்டும். இப்படி தான் பலர் தங்கள் வீட்டிலே நெய்யை தயாரித்து வருகின்றனர். கடைகளில் பாலில் இருந்து பிரிக்கப்படுகின்ற பாலாடை அல்லது நீக்கு தேவையான பகுதியை தவிர மீதம் இருப்பது மற்ற பொருள்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆய்வு அறிக்கை கூறுவது என்ன?
சாம்பிள் எடுக்கப்பட்ட லட்டுகளை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட அறிக்கை கொழும்பின் மதிப்பானது எஸ் மதிப்பு என்ற பெயரில் வெளியாகி உள்ளது. அதோடு எடுக்கப்பட்ட ஐந்து சாம்பிள்களின் கொழுப்பு மதிப்பும் ஒரே மாதிரியாக இல்லாமல் ஐந்து மதிப்புகளில் இரண்டு மதிப்புகள் அதிகமாகவும் மூன்று மதிப்புகள் குறைவாகவும் உள்ளது. இப்படி எடுக்கப்பட்ட சாம்பிள்களின் கொழுப்பு மதிப்பானது குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால் அதில் ஆரோக்கியமற்ற வேறு ஒரு கொழுப்பு உள்ளது என்று அர்த்தமாகிறதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வேறு கொழுப்பானது மீன் எண்ணெய் அல்லது மாட்டிறைச்சியின் கொழுப்பு தான் என்று உறுதியாக கூற முடியாது எனவும், பசுமாட்டை தவிர வேறு மாட்டின் நெய் அல்லது மாட்டிற்கு வழக்கமாக கொடுக்கப்படுகின்ற தீவனத்தின் அளவு அதிகமானாலும் தீவனத்தின் அளவு குறைந்தாலும் அதன் மூலமாக தயாரிக்கப்படுகின்ற நெய்யில் இருக்கும் கொழுப்பு இது போன்ற தவறான எஸ் மதிப்புகளை காட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த சர்ச்சை மூலம் திராவிடவாதிகள் மகிழ்ச்சியடைந்தனர் மற்றும் பிரசாதத்தில் மாட்டிறைச்சி கொழுப்பைக் கொண்டிருப்பதால் இந்துக்களை கேலி செய்யத் தொடங்கியுள்ளனர். அதாவது தன்னைச் சுற்றுச்சூழலாளர் என்று சொல்லிக் கொள்ளும் திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ், "குறைந்தது 100 கோடி மக்கள் திருப்பதிக்கு வந்திருப்பார்கள். அவர்களுக்கு லட்டுகள் கிடைத்திருக்கும். என்ன நடந்தது? மாட்டிறைச்சியை ரசித்தீர்களா? உங்களுக்கு பிடித்ததா? நீங்கள் முடித்துவிட்டீர்கள். குறைந்தபட்சம் இப்போது வேறொருவரின் தட்டைப் பார்க்க வேண்டாம். போய் உன் வேலையை செய். பெருமாள் தானே உனக்கு நல்ல லட்டு கொடுத்தான்” என்று பதிவிட்டுள்ளார்.