தீவிரவாத குழுக்களுடன் இணைக்கப்பட்ட என்ஜிஓக்களுக்கு எஃப்சிஆர்ஏ உரிமம் இல்லை:மோடி அரசு வைத்த செக்!
நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற பெரும்பாலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்து வருகிறது. இந்த உதவியை தன்னார்வத் தொண்டு நிறுவனம் பெறுவதற்கு எப்சிஆர்ஏ எனப்படுகின்ற வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பதிவு செய்திருக்க வேண்டும்
ஆனால் கடந்த சில மாதங்களாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட மூளையாக செயல்படுவதாகவும் மத்திய அரசிற்கு புகார்கள் வந்துள்ளது. இதனை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது
அதன்படி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏதேனும் மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்ததோ பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததோ அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதோ உறுதி செய்யப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலே எப்சிஆர்ஏ விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட கொள்கை ஆராய்ச்சி மையம் போன்ற முக்கிய நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது அதுமட்டுமின்றி எம்ஹச்ஏ ஐந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது
மேலும் எப்சிஆர்ஏ புதுப்பித்தலை கேட்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன்பாக வெளிநாட்டு நிதிகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டன என்பதையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் குறிப்பிட்ட நோக்கங்களுடன் அவை இணைந்துள்ளதா என்பதையும் எம்ஹச்ஏ பரிசீலிக்கும் அதோடு தேவைக்கேற்ப வருடாந்திர வருமானங்கள் பதிவேற்றபடாவிட்டாலோ அல்லது நிதி தவறாக பயன்படுத்தப்பட்டாலோ நிதி ஆவணங்கள் முரண்பாடுகளை காட்டினால் எப்சிஆர்ஏ வின் புதுப்பித்தல் மறுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் தற்போது 16023 என்ஜிஓக்கள் செல்லுபடியாகும் எஃப்சிஆர்ஏ உரிமங்களைக் கொண்டிருப்பதாகவும் 20711 நிறுவனங்கள் தங்கள் உரிமங்களை ரத்து செய்துள்ளதாகவும் எம்ஹச்ஏ இன் தரவு குறிப்பிடுகிறது