விஸ்வகர்மா திட்டத்தை எதிர்க்கும் திமுக:விரிவான விளக்கத்தோடு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எஸ்.ஜி.சூர்யா!
முதல்வர் அறிக்கை
28 நவம்பர் 2024 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்ட அறிக்கையில் சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது அதற்குப் பதிலாக சமூகநீதி அடிப்படையிலான சாதியப் பாகுபாடற்ற அனைத்துக் கைவினைக் கலைஞர்களுக்கும் முழு ஆதரவளிக்கும் விரிவான திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும்
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வென்ற தலைவர்களின் கொள்கை வாரிசுகளான நாங்கள் குலத் தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று பதிவிட்டிருந்தார்
எஸ்.ஜி.சூர்யா பதிலடி
இதற்கு பதிலளித்த தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா முதல்வர் ஸ்டாலினின் கருத்துகளை விமர்சித்ததோடு விஸ்வகர்மா திட்டம் குறித்து விரிவான பதிலையும் அளித்தார் ஸ்டாலினுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டதாக சூர்யா வாதிட்டார் அதாவது விஸ்வகர்மா திட்டம் என்னவென்றே புரியாமல் அரசியல் செய்யும் தமிழக முதல்வருக்கு அதை விளங்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம் மக்கள் பயன்பெற மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது அதனை செயல்படாத உங்கள் அரசு விமர்சிப்பது முற்றிலும் தவறானது முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களே என்றும் இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டினார் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் கடன்கள் பயிற்சி சந்தை ஆதரவு மற்றும் நவீன கருவிகள் மூலம் கைவினைஞர்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் ஆரம்ப ஒதுக்கீடு ரூபாய் 13,000 கோடி என்றும் அவர் தெளிவுபடுத்தினார்