பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டம்:பயனடையும் கோடிக்கணக்கான மக்கள்!
இன்று நடைபெற்ற மக்களவையில் பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன இந்த திட்டத்தின் கீழ் இதுவரையிலான 7 கட்டங்களில் 1118 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை தெரிவித்துள்ளது மேலும் 2024ம் ஆண்டில் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு
கரீப் கல்யாண் அன்ன யோஜனா
ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் நாட்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார இடையூறுகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள் இதனை கருத்தில் கொண்டு பிரதமரின் ஏழைகள் நலவாழ்வு உணவுத் திட்டத்தின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன இந்த திட்டத்தின் கீழ் இதுவரையிலான 7 கட்டங்களில் 1118 லட்சம் மெட்ரிக்டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டது. இதற்கான திட்டமிடப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் ரூ.3.91 லட்சம் கோடியாகும்
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகளுக்கு இந்த உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கி பிரதமரின் ஏழைகள் நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் இது வழங்கப்பட்டு வருகிறது அதற்கு முன்பாக உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டன 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை ஒரு ரூபாய்க்கு உணவு தானியங்கள் ஆகியவை வழங்கப்பட்டன இது பின்னர் இலவசமாக வழங்கப்பட்டது இந்த இலவசத் திட்டம் 2024 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது