விஜய் கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி:யார் இவர்?ஃபுல் ஸ்டோரி!

தமிழக அரசியலில் பரபரப்பான நகர்வு என விஜய் அரசியலுக்கு வந்தது பார்க்கப்பட்டாலும் தற்பொழுது விஜயின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி, கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமாரின் இணைப்பை தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சுறுசுறுப்பாக உற்சாகத்தில் சிறக்கிறது
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்ததில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி தான் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் யூகங்களை வகுத்துக் கொடுக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் கிசு கிசுக்கப்பட்டாலும் முதல்முறையாக விஜய் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவை நியமித்துள்ளார்
யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஜான் ஆரோக்கியசாமி தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முழுவதையும் தமிழகத்தில் தான் முடித்திருக்கிறார் சென்னை லயோலா கல்லூரியில் படிக்க முடித்து 11 ஆண்டுகளாக குட் ரிலேஷன் இந்தியா என்கிற நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்து பிறகு ஆப்பில் நிறுவனத்தின் பிராண்டின் பிரிவில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி இந்தியாவில் ஆப்பிள் மொபைல் போன்கள் மார்க்கெட்டிங் செய்வதற்கான பல வியூகங்களை வகுத்தும் கொடுத்திருக்கிறார்
ஜான் ஆரோக்கிய சாமியின் அரசியல் வியூக பயணம்
இதற்கிடையிலே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனாவிற்காக தேர்தல் வகுத்துக் கொடுத்து அதில் அவரின் திறமையை பார்த்து தனது மகன் ஆதித்யா தாக்கரேவின் தேர்தல் வெற்றிக்கான வியூக பணிகளையும் உத்தவ் தாக்கரே ஜான் ஆரோக்கியசாமியிடம் ஒப்படைத்தார் இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் சித்தராமையா டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மும்பையில் தாக்கரே என இந்தியா முழுவதும் ஜான் ஆரோக்கிய சாமியின் தேர்தல் வியூகங்களும் தொடர்புகளும் பரந்து விரிந்தது