திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினர் கூறுவது என்ன?

Update: 2025-02-06 17:20 GMT
திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து அமைப்பினர் கூறுவது என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சினையில் தடையை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாஜகவினரிடையே புதிய உற்சாகம் எழுச்சியும் தொற்றிக் கொண்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனையில் ஆடு, கோழி பலியிடச் சென்றபோது போலீசார் தடுக்க முயன்று, அதையும் பொருட்படுத்தாமல் படி மீது அமர்ந்து அசைவ பிரியாணி உண்பது என பிரச்சனை வளர்ந்தது.


திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணியினர் பிப்ரவரி 4 மதியம் 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தும் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்து முன்னணியினர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். பாஜக மற்றும் ஹிந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்து அமைப்பினர் மதுரை மட்டுமன்றி திண்டுக்கல், தஞ்சை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, திருப்பூர் உள்பட பிற மாவட்டங்களிலும் இப்பிரச்சினையை பிரச்சாரம் செய்தனர். தைப்பூச திருவிழா நேரத்தில் இப்பிரச்சினை வெடித்ததால் திருப்பரங்குன்றம் வர ஏற்கனவே முடிவு எடுத்த முருக பக்தர்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் நேற்று முன்தினம் மதியம் தீர்ப்பளித்த நீதிபதிகள் சில நிபந்தனைகளுடன் மதுரை பழங்காநத்தம் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று அறிவித்தனர். இதை வெற்றியாக கருதிய பாஜக உள்ளிட்ட அமைப்புகள் ஒரு மணி நேரத்தில் அங்கு பெரிய அளவில் திரண்டனர். இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்த போலீசார் பிப்ரவரி 3 அன்று இரவே தமிழக முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் துணைத் தலைவர்கள் சதீஷ்குமார் ராஜ்குமார் மண்டல தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட பல நிர்வாகிகளை கைது செய்து விராட்டிபத்து மண்டபத்தில் அடைத்தனர்.

மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை பொதுச்செயலாளர் விஷ்ணு பிரசாத் உள்பட பலரை வீட்டுக் கவலையில் வைத்தனர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவர்களை விடுவித்தனர் இரவில் இப்படி நிர்வாகிகளை கைது செய்தது பாஜகவினரிடையே வேகத்தை ஏற்படுத்தியது.

Input & Image Courtesy: News

Tags:    

Similar News