அண்ணாமலையை அவுட்டாக்க நினைத்த டிஎன் ஃபேக்ட் செக்! சிக்சர் அடித்த அண்ணாமலை!

திமுக அரசின் ஃபேக்ட் செக்
தமிழக அரசின் உண்மையை கண்டறியும் குழு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2,497 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டதாகவும் இந்த ஆண்டு 1,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில் மானியக் கோரிக்கையில் அன்பழகனார் என்ற பெயரே இல்லை என்று அண்ணாமலை பொய் கூறியுள்ளார் என்று கூறி 2025 - 26 நிதிநிலை அறிக்கை மீதான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை என திமுக அரசின் உண்மையை கண்டறியும் குழு கூறியுள்ளது
மேலும் கடந்த 2023 – 2024 ஆம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 560 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை என்பது மானியக் கோரிக்கையில் தெளிவாகிறது என அண்ணாமலை பொய் தெரிவித்திருக்கிறார்
உண்மையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 429.67 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் 1 ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று பொய் பரப்பியுள்ளார் என தெரிவித்துள்ளது
ஆனால் திமுக அரசின் உண்மை கண்டறியும் குழுவிற்கு அண்ணாமலை தக்க ஆதாரத்தோடு தான் கூறியது அனைத்தும் உண்மை என்பது நிரூபித்துள்ளார்
அண்ணாமலை வெளியிட்ட ஆதாரங்கள்
தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் இருப்பதும் பல பள்ளிகளில்,மேற்கூரைகள் இடிந்து விழுவதும்,வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடப்பதும் நாள்தோறும் செய்திகளாக வெளிவருகின்றன.நிலைமை இப்படி இருக்க,பல ஆயிரம் கோடி செலவில் பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளோம் என்று அமைச்சர்கள் சட்டசபையிலேயே கூறுகிறார்கள் அப்படி எங்குதான் பள்ளிகள் கட்டியுள்ளீர்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கேட்டோம் தமிழக உண்மை கண்டறியும் குழு ஊழியர் ஓடி வந்திருக்கிறார் 2025 - 26 ஆண்டுக்கான மானியக் கோரிக்கை இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றால்,இந்த financedept.tn.gov.in/en/my-document … இணைப்பில் இருப்பது என்ன