அடுத்து தமிழகம்தான் - ஆரம்பமாகும் அதிரடி வேலைகள் - ஜே.பி.நட்டா பதவி நீடிப்பின் பின்னணி

பா.ஜ.க'வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை நீடித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்திரவிட்டதால்

Update: 2023-01-18 11:23 GMT

பா.ஜ.க'வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை நீடித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்திரவிட்டதால் அடுத்த இலக்காக தமிழ்நாட்டை குறி வைத்து இறங்கவிருக்கிறார் ஜே.பி.நட்டா.

பா.ஜ.க'வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவி காலத்தை ஜூன் 2024 வரை நீடித்து கட்சி தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஒரு மனதாக முடிவை எடுத்துள்ளது. இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியில் பா.ஜ.க'விற்கு பல திட்டங்கள் உள்ளன.

இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் 9 மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென ஜெ.பி.நட்டா கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த முறை ஜே.பி.நட்டா தமிழகம் வரும்பொழுது கோவையில் என்ன நடந்தது என இப்பொழுது நாம் பார்க்க வேண்டியது அவசியம்!

சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கோவை வருகை புரிந்தார், கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் தாமரை கண்டிப்பாக மலரும், தமிழகத்தில் உட்கட்டமைப்பு வசதி சரியாக இல்லை, மக்களுக்கு வேலை இல்லை, இங்கே கட்டமைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் அதற்க்கு பா.ஜ.க தேவை அதற்கு தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே ஆக வேண்டும் இதுதான் இப்போது நமக்கு நோக்கமாக இருக்க வேண்டும். மக்கள் தி.மு.க மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்! தி.மு.க, எம்.பி'க்கள், எம்.எல்.ஏக்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்' எனவும் பேசினார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெறும், அதே போல் நாடாளுமன்ற தேர்தல் மட்டும் இன்றி சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது எனவும் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்திற்கு முன்பாகவும், கூட்டம் முடிந்த பின்பும் கோவையிலேயே தங்கி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பா.ஜ.க'வின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசி 2024 தேர்தலுக்கு செய்ய வேண்டிய வேலைகளை தெளிவாக விவரித்ததாகவும், தமிழக பா.ஜ.க'வின் திட்டம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் கூட்டணி குறித்த விவரங்களை தேசிய மேலிடம் கவனித்துக் கொள்ளும் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், அதே நேரத்தில் களத்தில் பூத் பார்வையாளர்கள், பூத் ஏஜெண்டுகள் போன்ற அடிப்படை வேலைகள், மற்றும் எந்தெந்த தொகுதிகளில் நாம் பலமாக இருக்கிறோம் எந்த தொகுதிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என கணக்கெடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் பா.ஜ.க ஆல்ரெடி களத்தில் இறங்கி தகவல்களை திரட்ட துவங்கிவிட்டது. தற்பொழுது பா.ஜ.க'வின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா அடுத்த 1 1/2 ஆண்டுகளுக்கு இருப்பார் என அறிவித்ததன் மூலம் ஏற்கனவே செய்த திட்டத்தின் படி வேலைகளை மீண்டும் அதிகப்படுத்தவும், வேகப்படுத்தவும் ஜே.பி.நாட்டா முழு வீச்சுடன் களமிறங்க தயாராக உள்ளார்.

மேலும் இந்த ஆண்டு கர்நாடகா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல் முக்கியமாக பார்க்கப்படுகிறது எப்படியும் கர்நாடக தேர்தலுக்காக பா.ஜ.க'வின் தலைகள் கர்நாடகாவில் முகாமிடும் அதே நேரத்தில் பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலும் எப்படி வேலைகள் நடக்கிறது? எந்த அளவில் களப்பணிகள் நடக்கிறது என ஆய்வு மட்டுமின்றி, அதனை முடுக்கி விடவும் பல்வேறு நடவடிக்கை எடுக்க திட்டம் திட்டி வருகின்றனர்.

ஜே.பி.நட்டாவிற்கு இந்த ஒன்றரை ஆண்டு கால பதவி நீடிப்பு தற்பொழுது சாதகமாக அமைந்துள்ளது, இதுவரை ஜெட் வேகத்தில் சென்ற ஜே.பி.நட்டாவின் நடவடிக்கைகள் இனி ராக்கெட் வேகத்தில் இருக்கும்! 'மிஷன் தமிழ்நாடு' என்ற ஜே.பி.நட்டாவின் திட்டம் ஆரம்பமாகிறது.



Similar News