பேருந்து கிடையாது! நிழற்குடை வசதி கிடையாது! பெரும் அவஸ்தையில் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் - கண்டுகொள்ளுமா அரசு!
பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் தஞ்சை வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் அருங்குளம் அருகே ஈச்சங்கோட்டை அரசு வேளாண்மை கல்லூரி அருகே பயணியர் நிழலகம் மற்றும் பேருந்து வசதி இல்லாததால் நீண்ட தூரம் சுற்றிச் சென்று பேருந்து ஏற வேண்டிய சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் மாணவர்கள். தஞ்சாவூரு அருகே உள்ள இச்சங்கோட்டை அரசு வேளாண் மையம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி இயங்கி வருகிறது, இந்த வேளாண் கல்லூரிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், இயற்கை விவசாயிகள், மாணவர்கள், மாணவிகள் என அனைவரும் வந்து செல்லும் நிலை உள்ளது.
இப்படிப்பட்ட முக்கியமான கல்லூரியின் முன்பு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கூட இல்லை கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் வெயில், மழையில் நின்று பேருந்து ஏற வேண்டிய சூழல் உள்ளது. மேலும் ஒரே ஒரு பேருந்து மட்டும் சென்று வருவதால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. மாணவிகள் தொடர்ச்சியாக பேருந்து விட வேண்டும் எனவும் நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.