தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகாலாம் என இப்போது கூறியிருந்தாலும் அது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் மிக பழமையான கோவில்களில் பிராமணர்கள் அல்லாத மற்ற சாதியினர் அர்ச்சகர்களாக உள்ளனர்.
பெரம்பலூரில் உள்ள மதுரகாளி அம்மன் திருக்கோவில் காஞ்சிசங்கரரின் குல தெய்வம் ஆகும். அதுமட்டுமின்றி நிறைய பிராமணர்களுக்கு இந்த அம்மன் தான் குல தேவி.
இந்த கோவிலில் பூசாரியாக காலம்காலமாக வன்னியர் சமுதாய மக்கள் இருந்து வருகின்றனர். தற்போது வந்துள்ள நடைமுறையால் பரம்பரை பரம்பரையாக இருந்து வந்த குடும்பத்தினர் பூசாரியாக இருக்க முடியாது. இதனை எதிர்த்து அவர்கள் குடும்பம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.
அடுத்ததாக குலசேகர்பட்டிணம் முத்தாளம்மன் கோவில். இந்த கோவிலில் பிராமணர் அல்லாத வேறு சாதியினரே அர்ச்சகராக இருக்கிறார். இதனை அடுத்து மதுரையில் உள்ள பாண்டி முனிஸ்வரன் கோவிலில் முத்தரையர் வகுப்பை சார்ந்தவர்களே பூசாரியாக உள்ளனர். இந்த கோவிலில் தினம் ஆயிரகணக்கான மக்கள் வந்து வழிபடுவர்.
இது மட்டுமின்றி தஞ்சையில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்களால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோவில்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையதுறை கட்டுபாட்டில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இங்கு ஒரு பிம்பம் கட்டமமைகப்பட்டுள்ளது அதாவது பிராமணர்கள் பூஜை செய்யும் கோவில்களில் கோடிகணக்க்கில் பணம் சம்பாதிக்கப்படுவதாக ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கோவில்களில் தினம் ஆயிரகணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்கின்றனர். இந்த கோவில்களுக்கு சொந்தமாக உள்ள சொத்துகளை அறநிலையதுறை சரியாக பராமரிக்கவில்லை ஆனால் இவர்கள் ஒரு சாதியினர் மீதுள்ள வன்மத்தை இதில் வெளிப்படுத்துகின்றனர்.