யானை வழித்தடத்தில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - காருண்யா பல்கலைக்கழகம் FCRA விதிகளை மீறி கட்டப்பட்டதா.?

யானை வழித்தடத்தில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - காருண்யா பல்கலைக்கழகம் FCRA விதிகளை மீறி கட்டப்பட்டதா.?

Update: 2020-12-08 06:50 GMT

சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மலைப் பகுதியை ஆக்கிரமித்து ஈஷா யோகா மையம் கட்டி இருப்பதாக மறைமுகமாக தவறான தகவல்களை பரப்ப முயற்சித்தது. அப்போதே பல நூறு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் போதகர் பால் தினகரனைப் பற்றி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

மத போதகர் பால் தினகரனைப் பற்றியும் அவரது தந்தை DGS தினகரன் நிறுவிய Jesus Calls உட்பட அவருக்கு சொந்தமான பல கிறிஸ்தவ அமைப்புகள் பற்றியும் பல ஆண்டுகளாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்த போதும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது Legal Rights Observatory என்ற தன்னார்வ அமைப்பு, வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று அதை மத மாற்றம், நில அபகரிப்பு போன்ற சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.
 

 

தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் பால் தினகரன் கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், "அடுத்த தேர்தலில் இப்போது இருக்கும் ஆட்சியாளர்கள் நீக்கப்படுவார்கள்; இளம் தலைவர்கள் ஆட்சியில் அமர்வார்கள்" என்று 'தீர்க்கதரிசனம்' கூறினார். புதிய ஆட்சியாளர்கள் நாடு முழுவதும் சர்ச்சுகளைக் கட்ட அரசாங்க முத்திரையுடன் அனுமதி தருவார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

பால் தினகரன் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி மூலம் மத மாற்றத்தில் ஈடுபடுவது தெரிந்த விஷயம் தான் என்றாலும், அந்தப் பணத்தில் தான் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காருண்யா பல்கலைக் கழகம் கட்ட 900 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. தினகரனின் CogWheel Trust, Peniel Orphanage, Buckley Orphanage உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து அனாதைக் குழந்தைகளுக்கு உதவுவதாகக் கூறி ₹ 40 கோடி நிதி பெற்று இந்த நிலத்தை அபகரிக்க பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலம் Elephant Corridor எனப்படும் யானை வழித்தடத்தில் உள்ளதாகவும் அதை ஆக்கிரமித்தே காருண்யா பல்கலைக்கழகம் கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல கிறிஸ்தவ அமைப்புகளை நிறுவியுள்ள தினகரன் குடும்பம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 30 இடங்களில் ஜெப கோபுரங்களைக் கட்டியுள்ளது. இவற்றில் பலவும் தினகரன் குடும்பத்தினரின் பெயரில் தான் இருக்கின்றன எனவும், ஜெப பேக்கேஜ் என்ற பெயரில் பல கோடி ரூபாய் சம்பாதிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
 

 

அவ்வாறு இருக்கும் போது குழந்தைகளைக் காட்டி வெளிநாடுகளில் பிச்சை எடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் உள்ள அமைப்புகளில் இருந்து பல ஆயிரம் டாலர் ரூபாய் நிதியில் இங்கு தினகரன் மற்றும் தினகரனின் மனைவி இவாஞ்சலின் நடத்தும்  அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

சாமியார்களுக்கு ஆடம்பரம் தேவையா என்று ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து சமூக சேவை, குழந்தைகள் பாதுகாப்பு என்ற பெயரில் நிதி பெறும் தினகரனின் அமைப்புக்கள் குழந்தைகளை ஏழைகளாகக் காட்டி தாங்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இவர்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
 

 

நற்செய்தியைப் பரப்புகிறோம் என்று அப்பாவி இந்துக்களையும், அநாதைகள் என்று ஏழைக் குழந்தைகளையும் காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் இவர்கள் அந்த நிதியை சொந்த காரியங்களுக்காகவும் சொத்து சேர்க்கவும் பயன்படுத்துவது சட்ட விரோதமான செயல் என்பதால் பால் தினகரன் நடத்தி வரும் அமைப்புக்கள் FCRA சட்ட விதிகளை மீறுவதாகவும், எனவே அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News