'ஆபரேஷன் சக்ரா' நாடு முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கிய சி.பி.ஐ -வெளிவரும் பகீர் பின்னணி

நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க 'ஆப்ரேஷன் சக்ரா' என்ற பெயரில் 18 மாநிலங்களின் 15 இடங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

Update: 2022-10-05 12:34 GMT

நாடு முழுவதும் சைபர் குற்றங்களை தடுக்க 'ஆப்ரேஷன் சக்ரா' என்ற பெயரில் 18 மாநிலங்களின் 15 இடங்களில் சி.பி.ஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, போலி கால் சென்டர் மூலமாக இணையம் மூலமாக பண மோசடி, தகவல் திரட்டு உள்ளிட்ட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக 'ஆபரேஷன் சக்ரா' என்ற பெயரில் சி.பி.ஐ நேற்று முதல் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சி.பி.ஐ அதிகாரிகள் தலைமையில் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போலீசார் இணைந்து பதினெட்டு மாநிலங்களில் சோதனை நடத்தினர் இந்த சோதனைகள் 87 இடங்களில் நடைபெற்றதில் 1.5 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சோதனை டெல்லியில் ஐந்து இடங்களிலும், சண்டிகளில் மூன்று இடங்களிலும், பஞ்சாப், கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தல இரண்டு இடங்களிலும் சோதனை நடந்து வருவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.




Source - Dinamalar

Similar News