அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் கூடும் இளைஞர் கூட்டம் - மாற்றத்தின் ஆரம்பமா?

அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் கூட்டம் அதிகரித்து வருவதும், இளைஞர்கள் பட்டாளம் அதிகம் கூடுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-07 11:30 GMT

அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் கூட்டம் அதிகரித்து வருவதும், இளைஞர்கள் பட்டாளம் அதிகம் கூடுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் 8 ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது, இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சட்ட மன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அண்ணாமலை அவர்களிடம் செல்பி எடுப்பதற்காகவும், அவருடன் பொன்னாடை போர்த்துவதற்காகவும் பா.ஜ.க'வினர் மட்டுமல்லாது இளைஞர்களும் மேடையில் குவிந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அண்ணாமலை'யுடன் செல்ஃபி எடுக்க இளைஞர்கள் கூட்டம் குவிந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் நிலைக்கு போனது விழா ஏற்பாட்டாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மேடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக அங்கு அமர்ந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ சோழன் பழனிச்சாமி தடுமாறி சற்று கீழே விழுந்தார், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அண்ணாமலை செல்லும் இடங்களெல்லாம் இளைஞர் பட்டாளம் கூடிவரும் போதும் அதற்காக பெருமளவில் கூட்டம் கூடுவது தமிழகத்தில் பா.ஜ.க'வின் எதிர்கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News