வாக்குறுதி 181 என்ன ஆனது? தொடர்கதை ஆகும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்..

திமுக ஆட்சியில் தொடர்கதை ஆகும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம்.

Update: 2023-05-27 14:53 GMT

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர பணி செய்யும் ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு ஆகியவை வழங்கப்படும் என்று தன்னுடைய வாக்குறுதியாக திமுக 181 இல் குறிப்பிட்டு இருந்தது. அந்த வாக்குறுதி என்ன ஆனது? தங்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டிஜிபி வளாகத்தில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஒரு ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் தான் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக ஆசிரியர்கள் தமிழகத்தில் தங்களுடைய உரிமைக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் தமிழ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு விடியல் தருவோம் என்பது போன்று விளம்பர வாக்குறுதிகளை எல்லாம் அளித்துவிட்டு, தற்பொழுது ஆசிரியர்கள் அனைவரும் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய ஒரு சூழ்நிலையை தான் தற்போது உருவாக்கி இருக்கிறார்கள். 


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் குரலாக தன்னுடைய கருத்தை எடுத்து வைத்தார்.


அதில் அவர் கூறுகையில், 'திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது. மே மாதம் சம்பளம், ஊதிய உயர்வு எதுவுமே இதுவரை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோனவர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கி முதல்வர் ஆறுதல் கூறி உள்ளார். ஆனால் பணி காலத்தில் இறந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் எதுவுமே செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும் இது பற்றி அவர் கூறும் பொழுது, 2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி,இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களில் 5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர். முதலில் 2014-ம் ஆண்டுரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.


பின்னர் 2017 ஆம் ஆண்டு ரூ.700 உயர்த்தப்பட்டது. கடைசியாக 2021-ம் ஆண்டு ரூ.2,300 சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.10,000 ஊதியம் தாங்கள் பெறுகிறோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கி தமிழக முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார். இந்தப் போராட்டத்தின் போது பெண் ஆசிரியைகள் உட்பட பலரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். போராட்டத்தில், பல ஆசிரியர்களின் உடல்நிலை மோசமானது. நேற்று மூன்று ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுத்து, இன்னும் ஒரு சில தினங்களில் முடிவு தெரிவிக்கப்படும் என்று கூறி பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News