இந்தூர் மகாராணி அகல்யா பாயின் பிறந்தநாள் கொண்டாடும் ம.பி மக்கள்- அகல்யா பாயின் வீரம், தியாகம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து பேசிய மோடி!
இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்த நாள் இன்று. அதை மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மக்கள் கொண்டாடுகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் 1725 மே-31 ல் பிறந்தவர் அகல்யா பாய். தந்தை மங்கோஜி ஷிண்டே .தாய் சுசீலா அவரின் அறிவாற்றல் ,சிவபக்தி ,அன்பு மக்கள் மீது காட்டும் அக்கரை ஆகியவற்றை அறிந்த இந்தூர் மன்னர் மல்ஹோரா ராவ் தன் மகன் காண்டே ராவுக்கு அகல்யா பாயை திருமணம் செய்து வைத்தார்.கணவர் அகால மரணமடைந்தார். இந்தூர் மகாராணியாக 1767 இல் பொறுப்பேற்றார். அப்போது முகலாயர்களின் ஆட்சி காலம் என்பதால் அவற்றை எதிர்த்துப் போராடி ஆட்சியை தக்க வைத்தார்.
பல்வேறு சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். குழந்தைத் திருமணத்தை தடுத்தார். அவரது ஆட்சியில் அந்நிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட கோவில்கள் சீரமைக்கப்பட்டன. சிவபக்தையான அவர் ஆட்சியை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தார் .அந்நிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை சீரமைத்தார் ராணி அகல்யாபாய்.
அதை அடுத்தே தற்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவிலை சீரமைத்தார் ராணி அகல்யாபாய்.தற்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. காசி கோவில் வளாகம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி ராணி அகல்யா பாயின் வீரம், தியாகம், பக்தியை நினைவு கூர்ந்தார்.
SOURCE :Newspaper