பீட்டா (PETA) நிறுவனத்தைப் பற்றி தமிழர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சிறிது காலம் இருந்த தடைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றான இந்த அமைப்பு தமிழர்களின் விரோதத்தை மிக சுலபமாகவே சம்பாதித்துக் கொண்டது.
அதன் பிறகு, அவ்வப்போது இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டுகளில், அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய செக்குய்யா கேப்பிடல் (Sequoia Capital) என்ற 'பனாமா பேப்பர்ஸ்' புகழ் நிறுவனத்திடம் இருந்து 32.09 கோடி ரூபாயை பீட்டா நிதியாக பெற்றுள்ளது என LRO அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
பால் பொருட்களை பயன்படுத்துவது மிருகவதை என்று கூறி அதற்கான தாவர மாற்று வழிகளை பின்பற்ற கூறும் PETA இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுலைக் குறிவைத்து போலி புகார்களை அளித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு நிதியை பெற்று அதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவின் பாரம்பரியம் ஆகியவற்றை குறி வைப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக சட்டப்பாதுகாப்பு கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு விசாரணை கோரி LRO கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.