விழிஞ்சம் துறைமுகம் வரக்கூடாது என கலவரத்தை தூண்டும் பாதிரியார்கள் - தென் தமிழகம் முன்னேறக்கூடாது என்ற உள்நோக்கமா?

விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானவர்களை விடுவிக்க கூறி பாதிரியார்கள் அடியாட்களை திரட்டி போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-12-05 14:21 GMT

விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானவர்களை விடுவிக்க கூறி பாதிரியார்கள் அடியாட்களை திரட்டி போராட்டம் நடத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள குமரி மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள விழிஞ்சம் பகுதியில் தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது. இத் துறைமுகம் அமைக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி இப்பகுதியைச் சேர்ந்த கடற்கரை கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இப் போராட்டத்திற்கு லத்தீன் கத்தோலிக்க பாதிரியார்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அவர்களும் இப்போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள், இந்நிலையில் விழிஞ்சம் துறைமுகத்தை ஆதரித்து ஒரு பிரிவினர் கருத்து தெரிவித்து வந்தனர் சமீபத்தில் போராட்டத்தை ஆதரிப்பவரும் எதிர்ப்போருக்கும் இடையே தகராறு மூண்டது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கலவரத்தில் ஈடுபட்டதால் பலருக்கும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் ஐந்து பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இத்தகவல் அறிந்து அன்று இரவே விழிஞ்சம் போலீஸ் நிலைய முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் போலீசாரை பிடித்து சென்றவர்களை விடுவிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். போலீஸ் நிலையம் முன்பு திரண்டவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர் ஆனால் போலீசார் பிடித்து சென்றவர்களை விடுவித்தால் மட்டுமே அங்கிருந்து செல்வோம் என பாதிரியார்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கூறினர். இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொழுது ஆத்திரமடைந்த போராட்ட கும்பல் பாதிரியார்கள் தலைமையில் காவல் நிலையத்துக்குள் புகுந்து சூறையாடியது.

இதனால் அங்கிருந்த பொருட்கள் மற்றும் அனைத்தும் சேதம் அடைந்தது மேலும் அந்த கலவரத்தில் 36 போலீசார் காயமடைந்தனர். இவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனை எடுத்து அங்கு ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயர் போலீஸ அதிகாரிகளும் விரைந்துள்ளன அவர்கள் போராட்டக்காரர்களுடன் சமராச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற மேலும் மற்றொரு பேச்சு வார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்து வருகிறார்.

இதனிடையே இந்த போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதில் திருவனந்தபுரம் லத்தின் கத்தோலிக்க பேராயர் தாமஸ் ஜே மற்றும் 15 பாதிரியார்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் பிடித்துச் சென்ற ஐந்து பேரில் 4 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


Source - Junior Vikantan

Similar News