தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி - தமிழக அரசியல் வரலாற்றில் ஏற்படுத்தப்போகும் திருப்பங்கள்

தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வரவிருப்பது தமிழக அரசியல் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-13 05:08 GMT

தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வரவிருப்பது தமிழக அரசியல் கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதி நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமான திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ள தேவர் ஜெயந்திக்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டம் நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க அழைப்பு விடுத்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதன் அடிப்படையில் சாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் லாபம் பார்ப்பதற்காக பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் தரப்பில் கூறி கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ.க தரப்பில் கேட்கப்பட்டபோது, 'முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருவது இன்னும் உறுதியாக வில்லை' என தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார். மேலும் 'இது போன்ற விஷயம் முதலில் மாநில தலைமைக்கு தான் தெரிய வரும் எனவே உறுதிப்படாத இந்த செய்தியை திட்டமிட்டு செய்தியாக்குவது சொல்வது என யாரோ இதை முன்னெடுத்து இருக்கிறார்கள்' எனவும் கூறினார்.

அப்படி பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வந்து கலந்து கொள்ளும் பட்சத்தில் தமிழக அரசியல் இது திருப்பமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Source - Junior Vikatan

Similar News