தமிழகத்தை வளமாக்க பிரதமர் மோடி வருகிறார் - கட்டியம் கூறும் அண்ணாமலை

பிரதமர் மோடி வருகையால் தமிழ் நாடு வளமான நாடாக மாறுகிறது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-26 08:03 GMT

பிரதமர் மோடி வருகையால் தமிழ் நாடு வளமான நாடாக மாறுகிறது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 'பிரதமர் மோடி தமிழ் நாட்டு மக்களுக்காக ரூபாய் 31,400 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் புதிய தொழில் வளர்ச்சி, போக்குவரத்து மறுமலர்ச்சி, கட்டமைப்புகளில் எழுச்சி, வேலைவாய்ப்புகளில் புரட்சி, மக்கள் மனதில் புத்துணர்ச்சி என பல்வேறு துறைகளைச் சார்ந்த புதிய முன்னேற்றத் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்படுகிறது' என்றார்.

மோடி துவங்க உள்ள திட்டங்களை பட்டியலிட்டு அவர் தெரிவித்துள்ளதாவது,


- 500 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை, தேனி இடையே 75 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை.

- 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு, தாம்பரம் இடையே மூன்றாவது அகல ரயில் பாதை.

- 850 கோடி ரூபாய் மதிப்பில் 115 கிலோ மீட்டருக்கு எண்ணூர், செங்கல்பட்டு மற்றும் 271 கிலோமீட்டர் தொலைவில் 850 கோடி ரூபாய் மதிப்பில் திருவள்ளூர், பெங்களூர் குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம்.

- 116 கோடி ரூபாய் செலவில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் ஏழைகளுக்கு வழங்கப்படும்.

- ரூபாய் 14,870 கோடி ரூபாய் செலவில் சென்னை, பெங்களூரு இடையே 262 கிலோமீட்டர் அதிவிரைவு சாலை.

- ரூபாய் 5850 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம், மதுரவாயல் பகுதிகளை இணைக்கும் 21 கிலோமீட்டர் அதிவிரைவு நான்கு வழி பறக்கும் சாலை திட்டம்.

- ரூபாய் 3870 கோடி ரூபாய் செலவில் தருமபுரி, நேரளூரு 94 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டம்.

- 720 கோடி ரூபாய் செலவில் மீன்சுருட்டி, சிதம்பரம் பகுதிகளை இணைக்கும் 31 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை திட்டம்.

- 1800 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம்.

- திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் பிரதமரின் விரைவு சக்தி (GATI sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் அமையவிருக்கும் பன்முனை சிறப்பு பூங்கா.

- 1200 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம்.

இப்படியான பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதி ஆகியவை பெருகும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Similar News