சத்தமில்லாமல் சாதிக்கும் பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டம் - விமர்சனங்களை மட்டுமே குறி வைக்கும் இந்திய ஊடகங்கள்..!

EQUIPMENT PRODUCED UNDER “MAKE-IN-INDIA” SCHEME

Update: 2021-08-03 02:56 GMT

https://www.ibef.org/

கடந்த சில ஆண்டுகளில் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் கீழ் 'தனுஷ்' பீரங்கி, பாலம் அமைக்கும் டாங்கி, 'தேஜாஸ்' இலகுரக விமானம், 'ஆகாஷ்' ஏவுகணை, 'ஐஎன்எஸ் கல்வாரி' நீர்மூழ்கிக் கப்பல், கண்காணிப்புக் கப்பல்கள், ஐஎன்எஸ் சென்னை, ஐஎன்எஸ் கந்தேரி உள்ளிட்ட ஏராளமான குறிப்பிடத்தக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமம் மூலம் நாடு முழுவதும் தனியார் துறையினர் பாதுகாப்பு துறையில் பங்கு பெறுவதற்கு தற்போது வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது பிகார் மாநிலத்தின் நாளந்தாவில் ஆயுத தொழிற்சாலை இயங்குகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன தளங்கள், ஆயுதங்கள் மற்றும் உணரிகள், ஆயுதப் படைகளுக்கு தொழில்நுட்ப உதவியை அளிக்கவும் திறனை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

ஏவுகணை அமைப்புகள், வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு, போர் விமானங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், தொலை தூர ரேடார்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்பு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் துறைகளில் அமைப்பு முறைகளை மேம்படுத்துவதற்காக டிஆர்டிஓ திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு சேவைகளை நவீனமயமாக்குவதற்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 23.78% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை ஊக்குவிப்பதற்காக ஏராளமான கொள்கைகளையும் சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு உபகரணங்களின் உள்நாட்டு வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்த முயற்சிகளின் நோக்கமாகும்.

இதன் மூலம் இறக்குமதி மீதான சார்பும் வெகுவாகக் குறையும். மூலதன கொள்முதலுக்காக நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ. 1,11,463.21 கோடியில் ரூ. 71,438.36 கோடியை உள்நாட்டு மூலதன கொள்முதலுக்குப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நிதியாண்டுகள் மற்றும் தற்போதைய நிதியாண்டில் ஆயுத படைகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களில் 60% இந்தியர்களிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News