ஏழ்மை நிலையிலும் நீட் தேர்வில் வென்று மருத்துவம் படிக்க செல்லும் மாற்றுத்திறனாளி புதுக்கோட்டை மாணவி - நீட் பற்றிய பொய்களை உடைத்தார்

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

Update: 2022-11-16 03:39 GMT

புதுக்கோட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி நீட் தேர்வு மூலம் மருத்துவ படிப்பில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நவதாரணி என்கின்ற 19 வயது சிறுமி மாற்றுத்திறனாளி ஆவார், இவர் தனது கனவுகளுக்காக நீட் தேர்வில் பங்குபெற்று வெற்றியடைந்து தற்பொழுது மருத்துவ கல்லூரிக்கு மருத்துவம் படிக்க செல்கிறார்.

அவரது தந்தை தனபால் கார் டிரைவராக இருக்கிறார், ஏழ்மை நிலையில் இருந்தும் இவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து நவதாரணி என் தாயார் கூறியதாவது, பிறந்தது முதல் நவதாரணியை பல மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டாள் , சிறு வயதிலிருந்து டாக்டராக வேண்டும் என அவள் ஆசைப்பட்டாள் மருத்துவக் கல்லூரியில் தற்பொழுது என் மகள் மருத்துவம் படிக்க போகிறார்' என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மாற்றுத்திறனாளி சிறுமியான நவதாரணி நீட் தேர்வில் வெற்றி பெற்றது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Source - Asianet News

Similar News