ராஜராஜ சோழன் இந்து அரசன் கிடையாது - வரலாற்றை திரிக்கும் இயக்குனர் வெற்றிமாறனின் சூழ்ச்சி

ராஜ ராஜ சோழன் பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக தமிழ் சமூகம் செய்து கொண்டே வந்துள்ளது. பலர் அவரை தங்களுக்கு சொந்தமானவர் என சொந்தம் கொண்டாடியும் வருகின்றனர்.

Update: 2022-10-02 06:50 GMT

ராஜ ராஜ சோழன் பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக தமிழ் சமூகம் செய்து கொண்டே வந்துள்ளது. பலர் அவரை தங்களுக்கு சொந்தமானவர் என சொந்தம் கொண்டாடியும் வருகின்றனர். ஒரு சிலர் அவர் கொடுமைகாரன் எனவும் தூற்றி வருகின்றனர். இந்நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த கொண்டிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த நிலையில் பலரும் மீண்டும் ராஜ ராஜ சோழன் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் , இயக்குநர் வெற்றி மாறன் ராஜ ராஜசோழன் இந்து இல்லை என கூறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் அமைப்பை சினிமாவிற்குள் திரள வேண்டும் என திருமாவளன் கூறியதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து அடையாளகளை சிலர் திருடி கொள்வதாக தெரிவித்த அவர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிகின்றனர் என கூறினார்.

அதன்பின், ராஜராஜ சோழனை இந்து அரசராக நிறுவ முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார். பெருவுடையார் ஆலயம் அமைத்த ராஜராஜன் எப்படி இந்து அல்லாமல் இருப்பார் எனவும் அவரது காலத்தில் அவர் செய்த ஆன்மீக பணிகளை பற்றி தெரியாமல் பேசும் வெற்றிமாறனின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source - Youtube Video

Similar News