திராவிடப்பள்ளி என்ற போர்வையில் இந்து மத வெறுப்பையும், மதமாற்றத்தையும் மாணவர்கள் மத்தியில் பரப்ப திட்டமிடும் தி.மு.க !

Breaking News.

Update: 2021-09-19 08:15 GMT

"வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம்" என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியது இந்து மத கடவுள் வெறுப்பையும், மதமாற்றத்தையும் படிக்கும் மாணவர்கள் மத்தியில் விதைக்க தி.மு.க அரசு அஸ்திவாரமிடுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இந்து மத வெறுப்பாளர் சுப.வீரபாண்டியன் நிறுவிய திராவிட பள்ளியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது, "மாணவர்களுக்கு வரலாற்றை நினைவூட்ட திராவிட பள்ளிகள் தேவைப்படுகின்றன. கொள்கை பிடிப்பில் ஊரிப்போனவரே தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். இன்றைய வளர்கிற இளைஞர்களுக்கு திராவிடத்தின் வரலாற்றை பற்றி எடுத்துக்கூற திராவிடப்பள்ளி கட்டாயம்" எனவும், "வரும் ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திராவிட பள்ளிகள் இருக்க வேண்டியது அவசியம். வரலாற்றை தெரிந்திகொள்வதன் மூலமாக எதிர்காலத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் திராவிட பள்ளிகள் காற்று தருகிறது" என்றும் பேசினார்.

அதாவது திராவிட பள்ளி மட்டுமே வலராற்றை கற்று தருகிறது என்பது போன்ற மாயையை ஒரு அமைச்சர் விழா மேடையில் பேசியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் இந்து மத வெறுப்பை உமிழ்ந்து வந்த சுப.வீரபாண்டியன் துவங்கிய திராவிடப்பள்ளியை தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நிறுவ வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது இந்து மத வெறுப்பையும், மத மாற்றத்தையும் மாணவர்களை மத்தியில் பரப்ப திராவிடர் கழக பின்புல தி.மு.க அரசு திட்டமிடுகிறதோ என தோன்றுகிறது.

வரலாற்றை கற்று தருகிறேன் என்ற போர்வையில் திராவிடர் இயக்கம் இதுவரை தமிழரின் சிறப்புகளை மாணவர்களிடம் கற்று தரவில்லை, தமிழ் சங்க இலக்கியங்களை மாணவர்களிடம் கற்று தரவில்லை, தமிழ் மன்னர்களின் பெருமையை வரலாறாக கற்று தரவில்லை, தமிழ் கலைகளை மாணவர்களிடம் கற்று தரவில்லை மாறாக திராவிட இயக்கம் என்ற போர்வையில் குடும்பத்தின் ஆணிவேரான திருமண சடங்குகளை எதிர்த்தனர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய பண்பாட்டை எதிர்த்த திராவிட இயக்கம் விருப்பப்பட்டால் யார் கூட வேண்டுமானாலும் வாழலாம் என்ற அருவருப்பான பழக்கத்தை விதைத்து, சடங்குகளை எதிர்க்கிறேன் என்ற பெயரில் மத நம்பிக்கைகளை அசிங்கப்படுத்தியது, பெண் விடுதலை என்ற பெயரில் பெண்கள் மனதில் தாறுமாறான எண்ணங்களை விதைத்தது, இவ்வளவு சமூக சீர்கேடுகளையும் நமது பிள்ளைகள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்க ஆளும் தி.மு.க அரசின் உதவியோடு மீண்டும் களம் இறங்கியுள்ளதா திராவிடர் பள்ளி அமைப்பு என்ற சந்தேகம் எழுகிறது

இது போதாதென்று இந்து மதத்தை இழிவாக்கி அழித்தெடுக்கும் திராவிட சிந்தனையை படிக்கும் மாணவர்கள் மனதில் விதைக்க இருக்கிறது. இதுவரை கோவிலில் தமிழில் அர்ச்சனை வேண்டும், சாதி பாகுபாடு கூடாது என இந்து மக்களிடம் மட்டுமே கேட்டு வந்த கருச்சட்டை அணிந்த சுப.வீரபாண்டியன் குழுமத்தினர் இதுவரை உருது மொழியில் வழிபாடு நடத்தும் மசூதியில் தமிழில் வழிபாடு நடத்த கூறவில்லை, ரோமன் கத்தோலிக், சவுத் இண்டியன் சர்ச், பெந்தகோஸ்தே, தமிழ் இவாஞ்சலிஸ்ட் என சாதி வாரியாக பிரிந்து சர்ச் வைத்து வழிபாடு நடத்தும் கிருஸ்துவ மத பாதிரியார்களிடம் சாதி கூடாது என தைரியமாக கூறவில்லை ஆனால் இந்துக்களிடம் மட்டும் வீம்பாக பேசுவர் திராவிடர் போர்வை குழுமத்தினர். தற்பொழுது இதை மாணவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என கங்கணம் கட்டி இறங்கியுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது

இப்படி இந்து மத கடவுள் மறுப்பையும், மதம் மாறும் செயலையும் 'திராவிடப்பள்ளி' வரலாறு கற்று தருகிறேன் என்ற போர்வையில் பாடசாலைகளில் தி.மு.க சம்மதத்துடன் நுழைய திட்டமிட்டு வருகிறது.

Tags:    

Similar News