டிசம்பரில் இந்தியாவில் குவிந்த ரூ.10,555 கோடி முதலீடு - அயல்நாடுகளின் நம்பிக்கையை ஈர்த்த இந்தியாவின் வலிமையான பொருளாதாரம்

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் டிசம்பர் வரை 10,555 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது.

Update: 2022-12-19 02:39 GMT

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் டிசம்பர் வரை 10,555 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது.

எப்.பி.ஐ எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டிசம்பரில் இதுவரை இந்திய நிறுவன பங்குகளில் 10,555 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் முதலீட்டை வெளியே எடுத்திருந்தவர்கள் கடந்த சில மாதங்களாக முதலீட்டை அதிகளவில் சந்தைகளில் குவித்து வருகின்றனர்.

உலகளாவிய பொருளாதார சிக்கலில் இந்தியா உறுதியான நிலையில் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பங்கு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வழங்கிய தகவலின் படி டிசம்பர் 1 முதல் 16 வரை வெளிநாட்டு போலியோ முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 10,555 கோடி ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் நிகர முதலீடு 36,200 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

இந்தியாவைத் தவிர பிலிப்பைன்ஸ், தென்கொரியா, தைவான் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முறையிட்டார்கள் பணத்தை வெளியே எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

Similar News