குளித்தலை, திண்டிவனம் மக்களின் சிரமம் தீர மத்திய அமைச்சரை சந்தித்த SG.சூர்யா - குவியும் பாராட்டுக்கள்
பயணிகளின் பயன்பாட்டிற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டிவனத்தில் நிறுத்தவும், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் குளித்தலையில் நிறுத்த வேண்டியும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பா.ஜ.க'வின் மாநில செயலாளர் SG.சூர்யா
பயணிகளின் பயன்பாட்டிற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டிவனத்தில் நிறுத்தவும், மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் குளித்தலையில் நிறுத்த வேண்டியும் மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் பா.ஜ.க'வின் மாநில செயலாளர் SG.சூர்யா மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார்.
நேற்று மத்திய அமைச்சரை மக்களுக்காக சந்தித்த பா.ஜ.க'வின் மாநில செயலாளர் SG.சூர்யா இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். அதில் முதலாவதாக சென்னையிலிருந்து மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்(12635/12636) தொடர் வண்டியை மக்களுக்காக திண்டிவனத்தில் நிறுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தார்
அதன் பின்னணியில் திண்டிவனத்தை சுற்றியுள்ள 400 கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் அன்றாட பயணத்திற்கு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என குறிப்பிட்ட அவர் பயணிகளின் நலன் கருதி மத்திய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தார்.
மற்றுமொரு கோரிக்கையாக மைசூரிலிருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் மைலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16232)என இயக்கப்படும் ரயில் குளித்தலை சந்திப்பில் நிற்க வேண்டியும் கோரிக்கை வைத்தார்.
குளித்தலையை சேர்ந்த மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள், வியாபாரிகள் ஆகியோர் தினசரி குறைந்தபட்சம் 200 பயணிகள் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
இந்த இரு கோரிக்கைகளும் கடிதம் வாயிலாக அளித்த பா.ஜ.க இளந்தலைவர் SG.சூர்யாவிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.