உடனடி ஆற்றலுக்கு எலும்பிச்சை ஏற்றது என சொல்வது ஏன்? ஆச்சர்ய தகவல்

Update: 2022-11-11 01:00 GMT

நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா? சொல்லமுடியாட்த உடல் பலவீனம் மற்றும் தலைவலி உள்ளதா ? ஆரோக்கியத்தில் ஒரு சமநிலை என்பதை பெரும்பாலான வழிகளில் நீங்கள் உணர்கிறீர்களா ?

நீங்கள் எத்தனை தீவிரமாக உடற்பயிற்சி செய்தாலும், எத்தனை லிட்டர் தண்ணீர் குடித்தாலும் உங்கள் உடலுக்கு உட்ட சத்து தேவைப்படுகிறது எனில் அந்த தேவையை உடல் உங்களுக்கு உணர்த்தும்

அமெரிக்கா பல்கலைகழகம் நிகழ்த்திய ஆய்வொன்றில் மொத்த மக்கள் தொகையில் 30% மக்களுக்கு விட்டமின் சி குறைபாடு இருப்பது கண்டறியப்படுள்ளது.

மேலும் உங்கள் உடலின் இயக்கத்திற்கும் நல்வாழ்விற்கும் எந்த உறுப்புக்கு அதிகம் பொறுப்பிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்.

தெரிந்தால் ஆச்சர்யமடைவீர்கள், கல்லீரல் தான் அது. இந்த உறுப்பு தான் உங்களை ஆரோக்யமாக வைப்பதிலும் மற்றும் உறுதியாக வைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

மிகவும் அழுத்தம் வாய்ந்த அல்லது துரித வாழ்கைமுறையை கொண்டிருப்பவர்களுக்கு உடலில் இந்த குறைபாடு இருக்கிறது. விட்டமின் சி என்பது வெறும் எதிர்ப்பு சக்தியை மாத்திரம் கூட்டுவதல்ல, ஒருவரின் உடலில் சமநிலையை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் உடலில் சமநிலை இல்லாத போது அது கேன்சர், சர்க்கரை, ஆர்த்திரிட்டீஸ் போன்ற நோய்களுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

எனவே இதற்கு தீர்வாக இருக்ககூடியது எலும்பிச்சை. இந்த எலும்பிச்சையில் பொட்டாசியம், கேல்சியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீஸியம் சத்துகள் அடங்கியுள்ளன. எனவே தண்ணீரில் எலும்பிச்சை கலந்து எடுத்து கொள்வது முழுமையான ஆரோக்யத்திற்கும், எதிர்ப்பு சத்திற்கும் உகந்த தாக அமையும்.

முகத்திலுள்ள முகப்பரு பிரச்சனை, மேலும் சிறுநீரகத்தில் உள்ள கல் பிரச்சனை, மேலும் எதிர்ப்பு சத்து குறைபாடு, ஏதேனும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் முறையான அளவில், விதத்தில் எலும்பிச்சையை எடுத்து கொண்டால் மிகச்சிறந்த தீர்வாக அமையும்.

Tags:    

Similar News