சமூக வலைதள பதிவு, அல்கொய்தா தொடர்பு - அல்கொய்தாவின் தொடர்பு தமிழகத்தில்! நெஞ்சை உலுக்கும் உண்மைகள்

குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்த காரணத்தால் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்து பயங்கரவாதிகள் சதி செயலில் ஈடுபட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-07-28 08:25 GMT

குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்த காரணத்தால் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்து பயங்கரவாதிகள் சதி செயலில் ஈடுபட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் குடியுரிமை சட்டங்களை கொண்டு வந்ததால் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக கைதான இரண்டு பயங்கரவாதிகளும் பயங்கரவாத அமைப்புடன் கை கொடுத்தது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.


பெங்களூர் திலக் நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த பயங்கரவாதியான அத்தர் உசேன் லஸ்கரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.

அவன் கொடுத்த தகவலின் பெயரில் தமிழ்நாட்டில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான ஜுபான் என்ற அப்துல் அலியையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான இரண்டு பயங்கரவாதிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பத்து நாட்கள் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான பயங்கரவாதிகள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும் அந்த பயங்கரவாத அமைப்பின் இணைந்து செயல்படுவதற்காக காஷ்மீர் சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தான் செல்வதற்கு இரண்டு பேரும் திட்டமிட்டு இருந்தாலும் விசாரணையில் தெரிய வந்தது இந்நிலையில் அவர்களிடம் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டமான என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ'வை கொண்டு வந்திருந்தது, இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்த குடியுரிமை சட்டத்தால் வங்கதேசம் மற்றும் பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என அக்தர் மற்றும் சுபானுக்கு தெரிய வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர்கள் இரண்டு பேரும் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திலிருந்து அசாம் மாநிலத்திற்கு வந்தவர்கள் ஆவர்.


பின்னர் இடைத்தரகர்கள் மூலம் அசாம் மாநிலத்தில் தங்கியிருந்து ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இருவரும் வாங்கி இருந்தார்கள். இந்த குடியுரிமை சட்டத்தால் தங்களுக்கு பிரச்சினை ஏற்படும் என கருதி இந்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிராக செயல்பட இரண்டு பெரும் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து நாச வேலையில் ஈடுபட இரண்டு பேரும் திட்டமிட்டது பற்றிய தகவல்களும் போலீசருக்கு கிடைத்தது.

இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் இரண்டு பேரும் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் தற்போது கூட பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் இரண்டு பேரும் கருத்துக்களை பரிமாறி இருந்ததும் தெரிய வந்துள்ளது மேலும் பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக அத்தரும் சீமானும் வங்காள மொழியிலேயே பேசி இருந்தனர். இந்நிலையில் இந்த பயங்கரவாதிகள் கைதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - Daily Thanthi

Similar News