இலங்கை : மன்னார் மாவட்டத்தில் மீண்டும் பிள்ளையார் சிலை உடைப்பு !

Update: 2021-11-01 14:33 GMT

இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் கிருஸ்தவ மிஷனரிகள். கடந்த விநாயகர் சதுர்த்தி சமயத்தில் மடு – பரப்புக்கடந்தான் பகுதியில் இருந்த விநாயகர் சிலை கிருஸ்தவ மிஷனரிகளால் திருடப்பட்டது. அதைவிடக் கொடுமை, விநாயகர் இருந்த இடத்தில் அந்தோணியின் சிலையை வைத்ததுதான். இதற்கு எதிராக அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

தற்போது அதேப்போல இன்னொறு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதே மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் முசலி. இங்குள்ள விநாயகர் கோயில் பல நூறு ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது. அந்தக் கோயிலில் இருந்த விநாயகர் சிலைதான் கிருஸ்தவ மிஷனரிகளால் திருடப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர் அந்தப்பகுதி இந்துக்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் இளைஞர்கள் சிலரைத் தொடர்புக் கொண்டு விவரம் கேட்டோம். பெயர் வெளியிடாமல் பேச ஒப்புக்கொண்டனர். அவர்கள் கூறும்போது, 'முசலி கிராமத்தை ஒட்டிய காட்டுப்பாதையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். கோயில் காட்டுப்பாதையில் அமைந்திருந்தாலும், இந்த சுத்துவட்டாரப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விநாயகர் கோயில் இருந்தது. இந்தக் கோயில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. அந்தக் காலத்தில் மக்கள் வேட்டைக்குச் செல்வது வழக்கம். அப்படி வேட்டைக்குச் செல்பவர்கள் நல்லபடியாக வேட்டையை முடித்துக்கொண்டு, பத்திரமாக திரும்ப வேண்டும் என்று இந்த விநாயகர் கோயிலில்தான் வேண்டிக்கொண்டு செல்வார்கள்.



அதேப்போல இந்தக் கோயிலில் வேண்டிக் கொண்டு செல்பவர்களுக்கு எந்தக் கெடுதலும் நடந்தது கிடையாது. அதனால்தான் இந்த கோயில் சுத்துவட்டாரத்தில் மிகப் பிரபலமாக இருந்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்த பிள்ளையார் கோயில், ஒரு பாலை மரத்தின் அடியில் இருந்தது. பிறகு அரசாங்கம் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டியிருந்தபோது, அரசாங்கம் – பொதுமக்கள் இணைந்து சாலையோரம் கான்கிரீட் கட்டிடம் எழுப்பி அதில் பிள்ளையாரை மறுபிரதிஷ்டை செய்தார்கள். இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஷமிகள் பல நூறாண்டுகாலம் பழமையான இந்த விநாயகர் சிலையை அடித்து சுக்குநூறாக உடைத்துப் போட்டுவிட்டனர்.




இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து இந்துக்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் ருத்ர சேணை என்ற இந்து அமைப்பு, பல விதங்களில் முயற்சி செய்து ஒரு புது விநாயகர் சிலையை வடித்தது. அந்த சிலையை உள்ளூரைச் சேர்ந்த புத்த பிட்சு ஒருவருடன் இணைந்து மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்கள். இந்துக்களுக்கு ஆதரவாக பெளத்தர்களும், அந்த கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உதவினார்கள்.

இது நடந்து 20 நாள்தான் இருக்கும். அதற்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட புதிய விநாயகர் சிலையையும் விஷமிகள் களவாடிச் சென்றுவிட்டனர். இதனால் மன்னார் பகுதியில் வசித்து வரும் இந்துக்கள் பெரும் மனவருத்தத்தில் இருந்து வருகின்றனர்' என்று கூறினர்.



இலங்கையில் உள்ள இந்துக்களை ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும் !

குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரையே சாரும். கதிர் செய்திகள் இந்த கருத்துக்களுக்கு பொறுப்பாகாது.


 



Tags:    

Similar News