ஸ்டாலினுக்கு ஐரிஷ் பல்கலை டாக்டர் பட்டம்? உபிக்கள் அவிழ்த்து விடும் பொய்கள்!

ஸ்டாலினுக்கு ஐரிஷ் பல்கலை டாக்டர் பட்டம்? உபிக்கள் அவிழ்த்து விடும் பொய்கள்!

Update: 2020-12-30 12:07 GMT

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பரப்புரையில் உளறி வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பிம்பத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக அவர் கடந்த காலத்தில் சென்னை நகர மேயராக இருந்த போது ‘Irish International University’ என்ற வெளிநாட்டு பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது என்று ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

 

 

ஸ்டாலினுடன் தமிழகம் (‘Stalinudan TN’) என்ற ஹாஷ்டேகில் உங்கள் தலைவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன் இந்த புகைப்படம் வலம் வந்தது. அதில் அந்த பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச அளவிலான மேயர்கள் மாநாட்டில் இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே மேயர் ஸ்டாலின் தான் என்றும் அங்கு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

ஆனால் அந்த பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறாத, மதிப்பே இல்லாத கல்வி வழங்கும் கல்வி நிறுவனம் என்று தெரிய வந்துள்ளது. 2008ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, "பல ஆண்டுகளாக தரமற்ற, அங்கீகாரம் இல்லாத படிப்புகளை வழங்கும் இந்த போலி Irish International University பல்கலையை கடந்த ஏழு ஆண்டுகளாக ஆய்வே செய்யாமல் விட்டு வைத்துள்ளது அரசு" என்று குறிப்பிட்டுள்ளது. 

 

Full View

 

வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து இந்த பல்கலைக்கழகம் ஊழலில் ஈடுபடுவதாகவும் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Irish Times பத்திரிக்கையும் இதே போன்று, இது ஒரு போலி கல்வி நிறுவனம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற படிப்புகளை வழங்குவதாகக் கூறி இந்த பல்கலை வெளிநாட்டு மாணவர்களை ஏமாற்றுவதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு யுனெஸ்கோ 'தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்' என்று விருது அளித்ததாக விட்ட புருடாவைப் போல் தான் இதுவும் என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். 40 வருடங்களுக்கும் மேலாக பெரியாருக்கு 'தென்னிந்தியாவின் சாக்ரடீஸ்' என்று யுனெஸ்கோ விருது வழங்கியதாக தமிழ் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்துக்கு இது குறித்து இமெயில் மூலம் தகவல் கேட்ட போது, அப்படி ஒரு விருதே வழங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததும் இதே கதையாகத் தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.




 

References

 

http://news.bbc.co.uk/2/hi/uk_news/education/7175730.stm 

Similar News