ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி: காப்பர் இறக்குமதி 3.5 மடங்கு உயர்வு!

Update: 2021-03-26 11:49 GMT

2017-18 மற்றும் 2019-20 க்கு இடையில், இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட காப்பர் இறக்குமதி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதி 90 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

மக்களவையில் எழுதி அளிக்கப்பட்ட பதிலில் இதனை தெரிவித்த மத்திய சுரங்க, நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, சுத்திகரிக்கப்பட்ட காப்பர் இறக்குமதி 2017-18 ஆம் ஆண்டில் 44,245 டன்னிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் 92,990 டன்னாகவும், 2019-20ல் 1.52 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது என்றார்.

இதேபோல், ஏற்றுமதி 2017-18 ஆம் ஆண்டில் 3.78 லிட்டரிலிருந்து 2018-19 ஆம் ஆண்டில் 47,917 டன்னாகவும், 2019-20ல் 36,959 டன்னாகவும் குறைந்தது. மேலும், தூத்துக்குடியை அடித்தளமாக கொண்ட வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 2018 முதல் மூடப்பட்டிருப்பது தான் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தின் உள்நாட்டு உற்பத்தியை பாதித்தது என்று ஜோஷி கூறினார்.

நான்கு லட்சம் டன் சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அந்த காப்பர் ஆலை மூடப்பட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து தமிழக அரசு அதை மூட 2018ல் உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டதன் விளைவாக, நாட்டில் செப்பு உற்பத்தி, 2017-18 ஆம் ஆண்டில் 8.3 lt (Long ton)லிருந்து 2019-20ல் 4.1 ltயாகக் குறைந்தது என்று ஜோஷி கூறினார். 2018-19 ஆம் ஆண்டில் சுத்திகரிக்கப்பட்ட செப்பு உற்பத்தி 4.5 lt யாக இருந்தது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் இந்தியாவின் காப்பர் இறக்குமதி 2 ஆண்டுகளில் 3.5 மடங்கு உயர்ந்துள்ளது. காப்பர் உற்பத்தியில் 40% கொண்டிருந்த ஆலையில் மூடல் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாலை மாசுபாட்டை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் சுற்றுச்சூழல் மீறல் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

With inputs from: The Business Line

Tags:    

Similar News