செயின்ட் தாமஸ் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மதமாற்றம் - பரபரப்பு குற்றச்சாட்டு !

விசாரணை வேண்டும் என உள்துறை அமைச்சகத்திடம் கோரி கடிதம் எழுதியுள்ளதாகவும் LRO தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-26 02:10 GMT

இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.

FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), சேத்திப்புழாவை சேர்ந்த செயின்ட் தாமஸ் மருத்துவமனை, சர்வதேச மதமாற்று மாபியாவிடமிருந்து நிதி பெற்று தங்களிடம் வரும் நோயாளிகளை குறிவைத்து மதம் மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளது. அவர்களுடைய FCRA கணக்கும் சரிவராமல் முரண்பாடுகள் நிறைந்துள்ளதையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.



இது குறித்து மேலும் விசாரணை வேண்டும் என உள்துறை அமைச்சகத்திடம் கோரி கடிதம் எழுதியுள்ளதாகவும் LRO தெரிவித்துள்ளனர்.

உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News